உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அயல்நாட்டுப் பயணங்கள் ஈ.வே. ராமசாமிக்கு. மக்களைக் காண்பதில், அவர்களோடு கலந்துரையாடுவதில், அவர்களை அவர்களுடைய அன்றாட சூழ்நிலையில் காண்பதில் தணியாத ஆர்வம் உண்டு. அது, இருமுறை மலேயப் பயணமாக உருவாகியது. ஒருமுறை அய்ரோப்பியப் பயணமாகியது. ஒருமுறை பர்மியப் பயணமாகப் பரிணமித்தது. மும்முறை வட இந்தியப் பயணமாக விரிந்தது. மலேயாவில் பெரியார் நாகையிலிருந்து ஏற்பாடுகளைக் ஈ. வே. ராமசாமி, அவர் மனைவி நாகம்மையார், தோழர் எஸ். ராமனாதன், அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், சி.நடராசன் ஆகியோர் 15-12-1929 இல் மலேயாவிற்குக் கப்பலேறினர். அதற்குரிய கவனிக்க, நாகை காளியப்பன் முன்னரே சென்றிருந்தார். அந் நாட்டில் சில வாரங்கள் பயணஞ் செய்தபின், தாய்நாடு திரும்பி னார். மலேயா சுற்றுப்பயணத்தைப்பற்றி 22-12-1929 முதல் 'குடி அர'சில் செய்திகள் வெளிவந்தன. இதுபற்றிய முதல் செய்தியின் தலைப்பில், 'ராமசாமிப் பெரியார் வருகை' என்று குறிக்கப் பட்டிருக்கிறது. செய்திக்குள் இரு இடங்களில் ராமசாமிப் பெரியார் என்று எழுதப்பட்டுள்ளது. அது முதல், ஈ. வே. ரா. என்று அழைக்காமல், ஈ. வே. ராமசாமிப் பெரியார் என்றே பொது மக்கள் அழைக்கத் தலைப்பட்டார்கள். தமிழர் தலைவர், ஈ. வே. ராமசாமி, மலேயா நாட்டுத் தமிழர் களின் அழைப்பின் பேரிலேயே அந்நாட்டுக்குச் சென்றார். எதற் காக அழைத்தார்கள்? மலேயா நாட்டில் ஈப்போ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழர் சீர்திருத்த சங்க மாநாட்டைத் திறந்து வைப்பதற்காக, ஈ. வே. ராவை அழைத்தார்கள். அதையொட்டி அந்நாடு முழுவதும் சுற்றுப்பயணஞ் செய்வதற்கும் ஏற்பாடு செய் தார்கள். அதே நேரத்தில் மலேயாவில் மதத்தின் பேரால் பிழைத்து வந்த சிலர் திகில் அடைந்தார்கள். தங்கள் பிழைப்பில் மண் விழுந்து