உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புரட்சியாளர் பெரியார் 'தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கணபதி என்றும், பிள்ளை யார் என்றும் காட்டப்படும் உருவம் பழையது அல்ல. இந்தப் பிள்ளையார் சமீப காலத்தில்தான், அதாவது பரஞ்சோதி என்ற சோழ சேனாதிபதி வாதாபி நாட்டின்மீது படையெடுத்து வென்ற போது, பிள்ளையார் உருவத்தை வாதாபியிலிருந்து கொண்டு வந்தார். ஆக, இப்படிக் கடைசியாக வந்த கடவுளை முதலாவ தாக உடைக்க, ஒழிக்க முயற்சிக்கிறோம். இனிமேல் ஒரு புதுக் கடவுள் தோன்றாமல் இருக்க இந்தக் காரியம் பயன்படட்டும். யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதற்காக பிள்ளையார் உருவம் உடைக்கப்படுகிறது என்று யாரும் கருதவேண்டியதில்லை. நான் கணபதி ஆகவேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தை ஏற்பாடு செய்யவில்லை' என்று பெரியார் தெளிவுபடுத்தினார். பிள்ளையாரை சொந்த செலவில், களிமண்ணால் செய்து, வருணாசிரம முறையை ஏற்றுக்கொள்ளாமையின் அடையாளமாக அம்முறைக்கு ஆணி வேராக இருந்து தாங்கிக்கொண்டிருக்கும் இந்து சமயத்தை மறுப்பதன் அறிகுறியாகவே இப்பிள்ளையார் உடைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தூண்டிய பொது நடவடிக்கை என்ன? பெரியாரின் சொற்களால் காண்போம். அது இதோ: 6 எந்த நாட்டிலும் இல்லாத, நாட்டு நலனுக்காகவோ, கல்வி நலனுக்காகவோ, ஆட்சி நலனுக்காகவோ அல்லது மக்கள் நலனுக்காகவோ அல்லாமல் பார்ப்பன நலனுக்கும் சர்வ ஆதிக்க நலனுக்கும் ஆகவுமே ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வருணா சிரம தர்ம புதுப்பிப்புக்காகவே இந்த "ஜனநாயக ஆட்சி" என்பதில் செய்யப்பட்டு வருகிறது. 75 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான், 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி, மக்களைத் துறந்து, சந்நியாசியாக நம் திராவிட மக்களுக்கு இந்தச் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டுமென்றே பாடுபட்டு வந்த-வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஏன் 50 ஆயிரம் கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டைப் பாழடைய விட்டுவிட்டு. பரதேசியாய்ப்பிரயாணங்களுக்கும் பிரச்சாரத்திற்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்து வரும் நான்-இதற்கு இந்த வருணாசிரம தர்ம முறை ஒழிப்புக்கு ஏதாவதொரு காரியம் செய்யாமல் என் உயிர் போக, எப்படி என்னால் விட்டுக்கொண் டிருக்க முடியும்?" பெரியாரின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் பொம்மை உடைக்கப்பட்டது. திருச்சியில், நகர மண்டபத் திடலில் பெரியார்