உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் 161 தலைமையில், இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில், இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. சென்னையில் அண்ணாசாலையில் தோழர் குத்தூசி குருசாமியார் தலைமையில் நூற்றுக்கணக்கான பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. 'இராமன்' பட எரிப்பு 1956ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் முதல் நாள் தந்தை பெரியார் மற்றொரு அடையாளக் கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அது இராமன் பட எரிப்புக் கிளர்ச்சியாகும். திரு. ச. இராசகோபாலாச்சாரியார், 'சக்கரவர்த்தித் திரு மகனார்' என்னும் கட்டுரையில் 'இராமன் கடவுள் அல்லன். அவன் ஒரு வீரன்' என்று எழுதியிருப்பதையும் சங்கராச்சாரியாரும் இராமன் கடவுள் அல்லன். ஓர் ஆதர்சன புருஷன்; மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்தவன்' என்று கூறியிருப்பதையும் கோடிட்டுக் காட்டினார், பெரியார். கடவுள் அல்லாத இராமனின் முதல் செய்கையும் கடைசி செய்கையும் சாதியைக் காப்பாற்றப் பிறந்து, சாதியைக் காப்பாற்றிவிட்டு செத்ததேயாகும் என்று சுட்டிக் காட்டிய பெரியார், நம் நாட்டில் சமுதாயத் திருத்த வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்கவேண்டுமானாலும் முதல் இலட்சியச் செய்கையாக, ஸ்லோகக் காரியமாக, துவக்கக் குறியாக, இராமாயணம் இராமன், அழிந்து ஒழிக்கப்பட்டாகவேண்டும்' என்று அறுதியிட்டுக் கூறினார். 'தமிழனுக்கு இன்று தன்மானம் தான் தேவை. இது தாயினும் (மதத்தினும்), உயிரினும் (கடவுளினும்) சிறந்ததாகும். தாயை வெறுத்தாவது, உயிரைவிட்டாவது, மானத்தை, மனிதத் தன்மையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றவே, இராமனைக் கொளுத்தச் சொன்னேன்; சொல்கிறேன்' என்று அறிவித்து, குறிப் பிட்ட நாளில் இராமன் படத்தை எரிக்கும்படி திராவிடக் கழகத் தாருக்கு வேண்டுகோள் விடுத்தார். எதிர்பார்த்தபடி இக்கிளர்ச்சி யும் வெற்றிகரமாக நடைபெற்றது. தேசப் பட எரிப்பு இளமை தொட்டு, சாதி ஏற்றத் தாழ்வு முறைப்படி நடக்க மறுத்தவர், பெரியார் ராமசாமி. நெடுங்காலமாக, ஆழமாக, வேரூன்றி வளர்ந்து வந்துள்ள சாதி முறையை தன் வாழ்நாளி லேயே ஒழித்துக் கட்டிவிடவேண்டுமென்று பெரியார் போராடி னார். 11