பெரியாரின் தனித்தன்மை 167 ஒன்றை வாங்கிக்கொண்டு, குருசாமி வீட்டுக்குப் போனேன். குருசாமி என்னை பெரியாருக்கு அறிமுகப்படுத்தினார். பெரியார் எழுந்து நின்று கை குலுக்கினார். பழத்தை பெரியாரிடம் கொடுத் தேன். வாங்கிக்கொண்டதும், 'என்ன மணம்' என்று பாராட்டி னார். அடுத்த நொடி, 'என்ன விலைங்க அய்யா' என்று அவருக்கே உரிய அடக்கத் தோடு கேட்டார். ‘அதிகம் இல்லை' என்றேன். விடவில்லை. மூன்றுமுறை கேட்ட பிறகு, 'நாலணா' என்றேன். பெரியாருக்கு சினம் பொங்கிற்று. 'என்ன ஜம்பம்; நாலணாவுக்கு ஒரு பழம். அந்தப் பணத்துக்கு இரண்டு சீப்பு வாழைப் பழம் வாங்கியிருக்கலாம். இத்தனை பேருக்கும் கொடுத்திருக்கலாம். ஒரு பழத்திற்கு நாலணா என்ன அநியாயம்' என்று பெரியார் கடிந்துகொண்டார். அதிர்ச்சி யடைந்தேன்; ஆனால் அடங்கியிருந்தேன். ஏன்? அவருடைய சிந்தனை ஓட்டத்தின் சிறப்பு புரிந்தது. அது என்ன? 'இருப்பது சிறிதே ஆயினும் அதை எவ்வளவு அதிகமானவர் களுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் செலவிட வேண்டும்' என்பது பெரியாருடைய எண்ணம். அது நொடியில் எனக்கு விளங்கிவிட்டது. அப்புறம் அதே தவறைச் செய்யவில்லை. அடுத்து 1940ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 25ஆம் நாள், செல்வி காந்தம்மாவும் நானும் எங்கள் திருமணத்தை பதிவு செய்வ தைப் பார்க்க, பெரியார் சென்னைக்கு வந்திருந்தார். பெரியார், பதிவாளர் அலுவலகத்திற்கு எங்களுடன் வந்தால், அங்கே கூட்டம் கூடிவிடுமென்று இயக்கத் தோழர்கள் கூறியதால், பெரியாரை திருவல்லிக்கேணியில் என் மாமனார் திரு. சுப்ரமணியம் இல்லத்தி லேயே இருக்கும்படி வேண்டிக்கொண்டோம். பெரியார் பெருந் தன்மையோடு இசைந்தார். திருமணத்தைப் பதிவு செய்தபின், நாங்கள் இருவரும் மட்டும், வழியில் புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்குச் சென்றோம். புகைப்படம் எடுப்பதில் சற்று காலதாமதம் ஆயிற்று. காலந் தாழ்த்தி வீட்டிற்குத் திரும்பிய எங்களைப் பார்த்து, பெரியார், 'ஏன் இவ்வளவு நேரம்? புது மணமக்கள், எங்கே போய்விட்டீர்கள்' என்று கேட்டார். புகைப்படம் எடுத்துக்கொள்ளக் காலதாமதம் ஆனதைக் கேள்விப்பட்ட பெரியார், 'புகைப்படம் எடுக்க என்ன கட்டணம்?' என்று கேட்டார். நான் 'மூன்று ரூபாய்கள்' என்றேன். 'எத்தனைப் படங்களுக்கு' என்று கேட்டார் பெரியார்,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/179
Appearance