168 புரட்சியாளர் பெரியார். நான் 'ஒரு படத்திற்கே' என்றதும் பெரியார் வெகுண்டார். உடனே அவர் 'ரூபாய்க்கு மூன்று படம் கொடுக்கிற கடைகள் ஏராளம் இருக்கையில், எப்படி ஒரு படத்திற்கு மூன்று ரூபாய்கள் கொட்டிக் கொடுக்கலாம்?' என்று கனல்கக்கக் கேட்டார். பதில் சொல்ல விரும்பாது திகைத்தேன். உடனிருந்த பொன்னம் பலனார், 'இவ்வளவு சிக்கனமாகத் திருமணஞ் செய்துகொண்ட அத்தான் மூன்று ரூபாய்கள்தானே பாழாக்கிவிட்டார். நீங்கள் செலவு செய்ய முன்வந்த ஈராயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி விட்டாரே அய்யா!' என்று சொல்லவும் பெரியாரின் சினம் தணிந் தது. பொதுநலம்பற்றி சிறியோர் சொல்லினும் பொறுமையோடு கேட்டு விளக்கம் கூறும் இயல்பு பெரியாருக்கு இருந்தது. எடுத்துக் காட்டாக, 1941ஆம் ஆண்டு கோடைக்காலம். நானும் என் மனைவி காந்தம்மாளும் தஞ்சை கணபதி நகரில் புதுக் குடித்தனம் கட்டியிருந்தோம். உதவிக்காக என் மாமியார் திருமதி தங்கம்மா வந்திருந்தார். அவருடைய மாமிச சமையல் பெரியாருக்கு மிகப் பிடிக்கும். பெருந்தன்மை அவ்வமயம் தஞ்சைக்குப் பொதுக்கூட்டத்திற்கு வந்த பெரியா ருக்கு என் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி பூவாளூர் அ. பொன்னம்பலனார் எழுதியிருந்தார். அப்படியே செய்யப் பட்டது. பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, ஒற்றை மாட்டு வண்டி யில் பெரியார் வந்து சேர்ந்தார். அப்போது பெரியாருக்கு நல்ல காய்ச்சல்; வயிற்றுக் கோளாறு. மருத்துவர் சொன்னதையும் கேளாது, மருந்து சாப்பிட்டுக் கொண்டே திருச்சியிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வந்து, வழக்கம் போல நீண்ட நேரம் பேசினார். எங்கள் வீட்டிற்கு வந்தபோது களைப்புற்று இருந்தார். உடல் நலமற்று இருப்பதை உடன் வந்த தோழர்கள் தெரிவித் தார்கள். உடனே, பெரியாரிடம் வேண்டினேன்: 'அய்யா! மருத்துவர் சொற்படி நொடிப்பொழுதில் கஞ்சி வைத்துக்கொடுக் கச் சொல்கிறேன். தயவு செய்து அதைக் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 'தங்களுக்கு விருந்து கொடுத்தேன் என்னும் பெருமையைவிட, தங்கள் உடல் நலம் கெடாதிருக்க உதவி செய்தேனென்பதையே நான் விரும்புகிறேன். தயவு செய்து இன்று கஞ்சி குடியுங்கள்' என்றேன். பெரியார் ஒப்புக்கொண்டார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/180
Appearance