பெரியாரின் தனித்தன்மை 183 என்றார். நான் அடம் பிடித்தேன். அவரும் கட்டுப்பட இசைந் தார். நான் விரைந்து சென்றேன். பெரியார் அறை திறந்து இருந்தது. கட்டிலில் அய்யா உட்கார்ந்திருந்தார். நான் சட்டென்று உள்ளே நுழைந்துவிட்டேன். என்னைக்கண்ட பெரியார், எழுந்தபடியே, கைகூப்பி வணங்கிக் கொண்டே, 'சம்பந்தம்! சம்பந்தம்' என்று உரத்துக் கூப்பிட்டார். சம்பந்தம் மெதுவாக, உள்ளே காலடி எடுத்து வைத்தார். அவ்வளவுதான். பெரியார் அவரிடம்: 'உனக்கு இவ்வளவுக்கு ஆய்விட்டதா? என்.டி.எஸ். அய்யா ஊரில் இருக்கிறாரா என்று கண்டுபிடி என்றால், நேராக அவரிடமா தெரிவிப்பது? அவரை இங்கேயா வரவழைப்பது.' இன்னும் சில சூடான சொற்களைக் (கொச்சை இல்லை) கொட்டினார். நான் தலையிட்டேன். சம்பந்தம்பேரில் குற்றமில்லை. நான் வெளியே புறப்படும் நேரம் மணியடித்தது. நானே எடுத்து விட்டேன். என் வற்புறுத்தலினால் அவர் இருதலைக்கொள்ளி எறும்பானார்' என்று விளக்கினேன். எனக்காகக் கோபத்தை அடக்கிக்கொண்டார். அப்புறம்? எல்லோரையும் வெளியேபோகச் சொன்னார். பெரியார், கோவிந்தராசன், நான் மூவர் மட்டுமே இருந்தோம். பெரியார் கண்சாடை காட்டினார். கோவிந்தராசன் கதவை மூடிவிட்டு வந்தார். வேலை நீக்க அறிவிப்பு எப்படி வந்தது என்று 'அய்யாவுக்கு விளக்கு' என்று பெரியார் கோவிந்தராசனுக்கு ஆணையிட்டார்.' 'கோவிந்தராசன் பதவிகள் காலியாகும்போது, அவ்விடங் களுக்கு, முதலில் ஓராண்டிற்கு, ஆட்களை நியமிப்போம். ஆண்டு முடிவதற்குமுன், கல்லூரி முதல்வரின் கருத்தைக் கேட்போம். அவர் கருத்தில் எவர் எவருடைய பணி சரியாக இருக்கிறதோ, அவர்களைத் தொடர்ந்து ஒழுங்காக வேலையில் அமர்த்திக்கொள் வோம். அவருக்கு திருப்தியில்லாதவர்களை, அறிவிப்புக் கொடுத்து நிறுத்திவிடுவோம். இதோ பாருங்கள்' என்று சொல்லிக்கொண்டே ஒரு காகிதத்தை நீட்டினார். அது என்ன? ஒரு பட்டியல். என்ன பட்டியல்? முந்தைய ஆண்டுகளில் இப்படி நீக்கப்பட்டவர்கள் பட்டியல். முந்தைய ஆண்டுகளில், எந்த ஆண்டும் இருவருக்குமேல் நீக்கப்படவில்லை. அதைப் பார்த்ததும் முன்பு நீக்கப்பட்டவர்கள் இடங்களில் யாருடைய பரிந்துரையின் பேரில் ஆசிரியர்களை நியமித்தீர்கள் என்று கேட்டேன். கல்லூரி
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/195
Appearance