184 புரட்சியாளர் பெரியார் முதல்வர் பரிந்துரையின்பேரில், நியமித்தோம் என்று கூறி, பட்டிய லைத் தந்தார். முகவரிகளும் இருந்தன. நான், 'இப்போது வேலை நீக்கம் செய்யப்போகிறீர்களே! அவர்களுக்குப் பதில் எவர்களையாவது நியமித்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். "சில இடங்களுக்கு நியமித்துவிட்டோம். மூன்று இடங்களுக்கு இனியே நியமிக்கவேண்டும்' என்றார். கோவிந்தராசன் அத்தகவல் களையும் காட்டினார். என் மனதில் கருத்தொன்று பளிச்சென்று மின்னிற்று. சம்பந்தப்பட்ட துணைப் பேராசிரியர்களைப்பற்றி முதல்வர் எழுத்தில் புகார் செய்தாரா?' என்று வினவினேன். குழுக் கூட்டத்தில் வாயால் கூறுவார் என்பது பதில். 'நீங்களாவது அவர்களிடம் விளக்கம் கேட்டதுண்டா?' இல்லை என்ற பதில் வந்தது. 'அய்யா! நான் மட்டும் தங்களோடு தனியாகப் பேசலாமா?' என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். உடனே கோவிந்தராசன் எழுந்து போய்விட்டார். அய்யா! நான் தாளாளர் கோவிந்தராசனையும் முதல்வரையும் நம்புகிறேன். கல்லூரியின் நலத்திற்காகவே இதுவரை இப்படி நடந்திருக்கலாம். வழக்கு வந்தபிறகு, வழிமுறைகளைக் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. முதல்வரிடம் எழுத்துமூலம் புகார்களை வாங்கியிருக்கவேண்டும். அதன்பேரில் அவர்களுடைய விளக்கங்களைப் பெற்று குழுவின்முன் வைத்திருக்கவேண்டும். விளக்கங்களை ஒப்புக்கொள்வதற்கு இல்லை என்று குழு கருது மானால், அம்முடிவைக் கூறி அறிவிப்புக்கொடுத்திருந்தால் சரி. அப்படிச் செய்யாததால், நடவடிக்கை சரியல்ல' என்று நான் கூறிமுடிப்பதற்குள், பெரியார் 'அப்படித்தான் நினைத்தேன். திருச்சியிலிருந்து வரும்போதே, அவரிடம் சொல்லிவிட்டேன்; எல்லோரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று. இன்னும் ஏதாவது செய்யணுங்களா?' என்று பெரியார் கேட்டார். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் நியாயத்தைக் குறைசொல்வ நினைக்கவேண்டாம். வழிமுறை சரியில்லை என்பதற் காகவே, தங்கள் முடிவுப்படி நடக்கவேண்டியதாகிறது" என்றேன். 'அது' சரி' என்று சொல்லிவிட்டு, கோவிந்தராசனை அழைத் தார். தாக . 'அய்யாவும் நான் சொன்னபடியே நினைக்கிறார்கள். ஊருக்குப் போனதும் வேலை நீக்க அறிவிப்பை இரத்து செய்துவிடு' என்றார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/196
Appearance