உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 புரட்சியாளர் பெரியார் செய்து, நட்புறவு கூட்டங்களில் கலந்துகொண்டு, சென்னைக்குத் திரும்பிவந்தேன். பெரியார், சென்னையில் இருப்பதைக் கேட்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். என்னை அன்பொழுக வரவேற்ற பெரியார், தனக்கு அருகில் கட்டிலின்மேல் உட்காரச் சொன்னார், கீழ்ப் படிந்தேன். அடுத்து, நாட்களில் அப்போது பயணத்தைப்பற்றி சில மணித் துளிகள் பேசினார். மிகுந்த கவலையோடு, 'இன்னும் பதினைந்து பாக்கிஸ்தான் நம்மோடு சண்டைக்கு வந்துவிடும். இரஷ்ஷிய உதவி, உடனே கிடைக்குமா? உதவி உடன்படிக்கை காகிதத்தோடு நிற்குமா? இரஷ்ஷிய உதவி கிடைத்தால் பிழைத் தோம். இல்லாவிட்டால்' சொற்றொடரை முடிக்கவில்லை. அக்கறை தோய்ந்த கவலை தெரிந்தது. எத்தனை கொடுமைகளுக்கு ஆளானபோதிலும் இந்திய நாடு தோற்க வேண்டுமென்று எண்ணாத பெரியாரை, வெற்றி பெற்று வாழவேண்டுமே என்று ஏங்கிய பெரியாரை அன்று புதுக் கோணத் தில் புரிந்துகொண்டேன். என்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்காக வாதாடும் வழக் கறிஞர், கொலைப் பெருக்கத்துக்கு ஊ ஊற்றுக்கால் நினைப்பது தவறல்லவா? சட்டம், ஒழுங்கு, அமைதி கெடச் செய்பவர் என்று கருதுவது நியாயமாகுமா? சூத்திரர் என்று குற்றம்சாட்டப்பட்ட கோடிக்கணக்கான வர்களை அப்பொய்க் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து ஆக வேண்டுமென்னும் பெருந்துடிப்பில், திராவிட நாடு பிரிந்தால் அங்கே சமதர்மப் பொருளியல் முறையையும் சமுதாய சமத்து வத்தையும் நடைமுறையாக்குவது எளிதாகும் என்று சரியாகவே கணக்கிட்டார் பெரியார். எனவே, திராவிட நாட்டை பிரித்து விடுங்கள் என்று உரத்து வாதாடினார். பெரியார் கருத்துக்களை எதிர்த்து அரை நூற்றாண்டை வீணாக்கிய பிறகே மக்களுக்குத் தெளிவு ஏற்படும். எனவே இதில் பொதுமக்கள் போதிய ஆதரவு காட்டவில்லை. திராவிட நாட்டுக்காக வாதாடிய பெரியார் எவ்வளவு இந்திய பற்றாளர் என்பதை அவ்வேளை உணர்ந்தேன். உண்மை என்றால் நூற்றுக்கு நூறு உண்மை வைக்கம் போராட்டத்தின்போது உண்மை என்றால் நூற்றுக்கு நூறு உண்மையே இருக்கவேண்டும் என்று அறிவித்த பெரியார்.