பெரியாரின் தனித்தன்மை 187 அதை எவ்வளவு விழிப்பாகப் பின்பற்றினார் என்பதைக் காட்டும் நிகழ்ச்சி இதோ: 1973ஆம் ஆண்டு ஜூன் திங்கள்; தந்தை பெரியார் திருச்சியில் தங்கியிருந்த நாள், வந்த பல பார்வையாளர்களில், டாக்டர் சற்குருதாஸ் ஒருவர். அவர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். டாக்டர் தாசை, தமக்கே உரிய தனிப் பாசத்தோடு, தந்தை பெரியார் வரவேற்றார். சில மணித் துளிகள் இருவர் நலம்பற்றி பேச்சு. பிறகு, டாக்டர் தாஸ், பெரியாரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார். பெரியார் அதை நொடியில் படித்து முடித்தார். படித்து முடித்ததும், தாஸ் பெரியாரைப் பார்த்து, 'அய்யா, இந்த பெண் என் மகள். மருத்துவக் கல்லூரிக்கு மனுப் போட்டிருக்கிறாள். அய்யா பார்த்து, சொல்லவேண்டியவர்களிடம் ஒரு சொல் சொன்னால், அவளுக்கு இடம் கிடைத்துவிடும். அவள் எதிர்காலம் ஒளிமயமாகிவிடும். எங்களைப் போன்றவர்களுக்கு அய்யாவே அடைக்கலம்' என்று வேண்டிக்கொண்டார். இதற்கு 'இந்த அம்மாள் வாங்கியிருக்கிற மதிப்பெண்ணுக்கு தானாகவே இடம் கிடைக்கவேண்டும். முந்தி வந்திருந்தால், எவ் வித தயக்கமும் இல்லாமல், சொல்லியிருக்கலாம்.' 'என் யோக்கிய தைக்கு நான் சொல்கிற பரிந்துரைக்காக, ஆண்டுக்கு இரண் டொரு இடம் கொடுப்பார்கள். ஏற்கெனவே, அதற்குமேல் சொல்லிவிட்டேன். இதையும் நான் சொல்லி, இவ்வளவு மதிப் பெண் பெற்றவருக்கு இடம் தவறிவிடக்கூடாதே' என்பதே என் கவலை. 'நிறைய மதிப்பெண் இருப்பதால், வேறு எவர் வழியாக வாகிலும் ஒரு பரிந்துரையைப் பெறுங்கள்; இடம் உறுதியாகக் கிடைக்கும்' என்று பெரியார் பதில் அளித்தார். நம்பிக்கையுடைய கிறுத்தவராகிய டாக்டர் சற்குருதாஸ், அய்யா தங்கள் வாழ்த்து பலிப்பது உறுதி. எதற்கும் இச்சீட்டு தங்களிடமே இருக்கட்டும்' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டார். சில வாரங்களுக்குப் பிறகு, எங்கெங்கோ பயணம் செய்துவிட்டு, தொண்டு செய்து பழுத்த பழமாகிய பெரியார், திருச்சிக்குத் திரும்பினார். சிறிது நேரத்தில், டாக்டர் சற்குருதாஸ், திருமதி சற்குருதாஸ், செல்வி சற்குருதாஸ் ஆகிய மூவரும் பெரியார் மாளிகைக்கு சென்றார்கள்: வெறுங்கையோடா? இல்லை, பெரிய மாலையும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு போனார்கள். பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்கள்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/199
Appearance