உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சகுனத் தடை புரட்சியாளர் பெரியார் மூடநம்பிக்கையால், அறிஞர்கள்கூட எதை எதையோ கண்டு அஞ்சுவதைப் பாருங்கள். கல்விக் கடல், பக்திப் பெருமலை, புலவர் புண்ணியகோடி பரந்த நெற்றி முழுவதும் வெளுத்திருக்க, அதன் நடுவே பெரிய செஞ்சுடர் பளிச்சிட, 'அப்பா, கச்சியப்பா! காத்தருளப்பா!' என்று வேண்டியபடியே, திருவுடையானின் திருவிளையாடல்பற்றி குபேரர் வீட்டுக் குழந்தைக்கு நடக்கும் திருமணத்தில் கதாகாலட் சேபம் செய்யப் புறப்படுவார். தெருவில் காலெடுத்து வைத்ததும் வெள்ளை முக்காடுபோட்ட அம்மா ஒருவர் எதிரே வருவார். நல்ல பாம்பு எதிர்த்து வருவதுபோல் வியர்ப்பார்; உள்ளுக்குள் சபிப்பார்; வீட்டுக்குத் திரும்புவார்; ஒரு முடங்கு தண்ணீரைக் குடிப்பார்; மீண்டும் புறப்படுவார். மீண்டும் அதிர்ச்சி. நடுக்கம். 'நாசமாகப் போக' கைகால் என்று சபித்தபடியே புண்ணியகோடி மீண்டும் வீட்டுக்குள் பாய்வார். யானையைக் கண்டா ஓடினார்? பூனையைக் கண்டு ஓடினார். புலியை முறத்தால் அடித்துக் கொன்ற தாய்க்குப் பிறந்தவ ராயிற்றே. பூனைக்கு அஞ்சாமல் இருப்பாரா? விதவை எதிரே வந்தால், பூனை குறுக்கே போனால், பூணூல் போட்டவர் எதிர்ப்பட்டால். .சகுனத் தடை. 'நாள் என் செயும் கோள் என் செயும்' என்று திரும்பத் திரும்ப ஒப்புவித்தது புண்ணிய கோடியின் உதவிக்கு வரவில்லை. சாதிக் கொடுமைபற்றி சில சொற்கள்: சாதி வாய்ப்பாடு கணக்கு வாய்பாடு நமக்குத் தெரியும். சாதி சாதி வாய்பாடும் உண்டு. அது இக்கால இளைஞர்களின் காதுகளில் வீழ்ந்திருக் காது. சாதி வாய்பாடு என்ன? நம்மில் அய்ந்தில் ஒருவர் ஊர்களுக்கு வெளியே ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள். அவர்கள் வயலுக்கோ, தோப்புக்கோ, வேலைக்கு வருவார்கள் அல்லவா? அப்போது எந்தச் சாதியார், எந்தச் சாதி யாருக்கு எவ்வளவு தூரம் வரை நெருங்கலாம். இதற்கு வாய் பாடு கற்றுக் கொடுத்திருந்தார்கள். அதைப் பின்பற்றவேண்டியது பெரிய சாதிக்காரருடைய பொறுப்பல்ல. பொறுப்பு, தாழ்த்தப் பட்டவர் தலைமேல்.