உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை 9 நான்கடியில் நிற்கவேண்டிய சாதி; ஆறடிக்கு அப்பால் நிற்க வேண்டிய சாதி; பத்தடிக்கு அப்பால் இருக்கவேண்டிய சாதி என்று முறைப்படுத்தியிருந்தார்கள் முன்னோர்கள். ஆறடிவரை, நாலடி வரை நெருங்கக்கூடிய சாதியார்கள். வாயொலி மூலம் தாங்கள் நெருங்குவதை அறிவிக்கவேண்டும். பத்தடி, அதற்கு மேற்பட்ட தூரத்திலேயே நிற்கவேண்டியவர்கள், பறை கொட்டியோ, கொம்பு ஊதியோ அறிவிக்கவேண்டும். அதைக் கேட்டு நம்பூதிரி யும் நாயரும் ஒதுங்கவேண்டிய தூரத்தில் ஒதுங்கிவிடுவார்கள். அறுபத்து நான்கு அடி தூரத்தில் நிற்கவேண்டிய சாதியும் இருந்தது நம் புண்ணிய பூமியில். சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஒரு நிகழ்ச்சி. அப்போது கொச்சி தனியரசு; இந்திய மன்னர் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கே, குற்றவியல் வழக்கொன்று நடந்தது. அவ்வழக்கில் சாட்சி கூற அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், அறுபத்து நான்கு அடி தொலைவில் நிற்கவேண்டிய சாதிக்காரர். வழக்கு மன்றங்களிலும் சாதி நெருக்க வாய்பாட்டை கைவிட முடியாது. எப்படிச் சமாளித்தார் குற்றவியல் நீதிபதி? நீதிபதியின் இருக்கைக்கு நேர் எதிரில், அவர் கண்ணில் படும்படி, அவருக்கு அறுபத்து நான்கு அடி தொலைவில், சாட்சி நிறுத்தப் பட்டார். நீதிபதி, 'நான் சத்தியமாச் சொல்லுகிறேன்' என்று சத்தியம் செய்யக் கேட்பார். நீதிபதியின் எழுத்தர் சாட்சியிடம் சென்று அதைச் சொல்லுவார். சாட்சி சொன்னதை கேட்டுவந்து நீதிபதியிடம் ஒப்புவிப்பார். வழக்கறிஞர்களோ, நீதிபதியோ கேட்கும் கேள்விகளை, ஒவ்வொன்றாக எழுத்தர் சாட்சியிடம் கொண்டுபோவார். சாட்சியின் வாக்குமூலத்தை வழக்குமன்றத் தில் சொல்வார். எத்தனை கேள்விகள் சிதைந்தனவோ! எத்தனை பதில்கள் உருமாறினவோ! எழுத்தர், வசதிப்படி விட்டவை எத்தனையோ! சேர்த்துக்கொண்டவை எத்தனையோ! இப்படிப் பட்ட விசாரணையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதியே கிடைத்தது என்று நம்புவோம். இல்லாவிட்டால், அவமதிப்பு வழக்கில் சிக்கிக்கொள்வீர்கள். முற்காலத்தில் எந்த சிற்றூரிலும் ஆதி திராவிடர்கள் சொக்காய் போட்டுக்கொண்டோ காலணி போட்டுக்கொண்டோ தெருக்களில் நடக்கமுடியாது. என்னே கொடுமை. ஊருக்கு ஊர், தாழ்த்தப் பட்டோர் நடக்கக்கூடாத தெருக்கள்; போகக்கூடாத இடங்கள்; தொடக்கூடாத படித்துறைகள் என்று இருந்தன. தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனிக் கோயில்கள். அவர்கள் இந்துக்களே ஆயினும் சாதி இந்துக்கள் கோயில்களில் நுழையக்கூடாது. நாங்கள் சாதி இந்துக்கள் தானே என்று நாடார்கள் கமுதியிலும்