உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 போற்றத்தக்க பொறுமையைக் காட்டாக: புரட்சியாளர் பெரியார் கடைப்பிடித்தார். எடுத்துக் தன்மான இயக்கத்தின் தொடக்க காலத்தில் மன்னார்குடியில் பெரியதொரு பொதுக்கூட்டத்தில் ஈ. வே. ரா. பேசிக்கொண்டிருந் பார்ப்பனீயத்தால் விளைந்த கேடுகளைப்பற்றி விரித் துரைத்துக்கொண்டிருந்தார். அவர் பேசிய மேடைக்குக் கீழே ஒரு பார்ப்பனர் உட்கார்ந்துகொண்டு, சரமாரியான தார். கேள்விகளை எழுதி, அவரிடம் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஈ.வே.ரா. அத்தனைக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தார். கூட்டத்தினர் கடுங்கோபம் கொண்டு, கேள்வி கேட் போரின்மேல் சீறத் துடித்தனர். பெரியார் அவர்களை அடக்கிக் கொண்டே, பதில் அளித்துக்கொண்டிருந்தார். இடையில் கேள்வி எழுதிக்கொண்டிருந்தவரின் பென்சில் உடைந்துவிட்டது. இதை ஈ.வே.ரா.கண்ணுற்றார். அடுத்த நொடி, தன் பேனாவைக் கழற்றி, உரையைப் பின்புறம் போட்டு 'அய்யா! இதனால் எழுதுங்கள்' என்று கொடுத்துவிட்டு உரையைத் தொடர்ந்தார். அய்யர் வெட்கிப் போனார்; கேள்வி எழுதக் கையோடவில்லை. கூட்டம் முடிந்ததும் அவர் பேனாவை ஈ.வே.ராவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு 'நாயக்கர்வாள்! என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப்பற்றிக் கூறுவது முற்றிலும் தவறு. நீங்கள் மகாப் பெரியவர், நமஸ்காரம்' என்று சொல்லிவிட்டுப் போனார். பிறரை வருத்தாத தன்னிறைவு வாழ்நாள் முழுவதையும் போராட்டங்களில் கழித்த தந்தை பெரியார், மாற்றாரையும் நேரில் புண்படுத்த விரும்பியதில்லை. ஒரு சமயம் பெரியாரும் திராவிடன் ஆசிரியர் தோழர் கண்ணப்பரும் மதுரைக்கு இரயிலில் பயணஞ் செய்துகொண்டிருந் தார்கள். மூன்றாம் வகுப்பு வண்டியில் சென்றார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதே வண்டியில் பயணஞ் செய்து கொண்டிருந்த பார்ப்பனர் ஒருவர் கண்ணப்பரோடு வாதம் புரிந்து கொண்டிருந்தார். கண்ணப்பர் சில கடுஞ்சொற்களை பயன்படுத்தி விட்டார். உடனே பெரியார் இடைமறித்து, அவரை நோக்கி 'ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? பொறுமையாக கூறினால்தானே அவ ருடைய. தப்பெண்ணங்களை மாற்றி அவரை நம் பக்கம் திருப்பலாம். இம் மாதிரியான நல்ல சந்தர்ப்பங்களை வீணாக்கலாமா?' என் றார். அதற்கு அப்பார்ப்பனர் பெரியாரைப் பார்த்து 'பெரியவரே நீங்கள் சொல்வதை இவர் கேட்கமாட்டார். இவர்களெல்லாம்