பெரியாரின் தனித்தன்மை 203 அந்த ராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித் தான் பேசுவார்கள்' என்றார். பெரியார் சிரிப்பை அடக்கிக்கொண்டு, கக்கூசுக்குள் நுழைந்தார். இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் அந்த அய்யரை நோக்கி 'இவர்தான் ராமசாமி நாயக்கர்' என்று அடையாளம் காட்டிவிட்டார். பெரியார் வெளியே வந்தபோது அய்யர் எழுந்து நின்று வணங்கியபடியே 'அய்யா, தங்களை யார் என்று தெரியா மல் பேசிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். தங்களைப்பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் அனைவரும் பொய்யர்கள். தங்க ளுடைய நற்குணமும், பொறுமையும் எவர்க்கும் வராது' என்று பாராட்டினார். பெரியாரிடம் நேரில் பழகிய அனைவருமே இப் படித்தான் புகழ்வார்கள். பெரியார் எவருக்கும் சிறிதும் தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுக்க விரும்பமாட்டார். ஒருமுறை, சேலத்தில் பொதுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டுவந்தார். ஆத்தூரை நெருங்கும்போது கடும் புயலும் பெரும் மழையும் வந்தன. 'வேன்'னை ஓட்டமுடியாத நிலை ஏற்பட்டது; மெல்ல ஆத்தூர் பயணிகள் விடுதிக்குள் நுழைந்தது. அவ்வேளை அங்கு இரு அறைகளிலும் யாரோ தங்கியிருந்தனர். அவர்களை எழுப்பி தொல்லை கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு வேனிலேயே று புயலையும் கடும் மழையையும் பொருட்படுத்தாது தங்கியிருந்தார். விடியும் வேளை, உள்ளேயிருந்த பயணிகள், தந்தை பெரியார் இப்படி திறந்தவெளியில், புயலின்போது இரவை வெளியே கழித்த தைக் கேட்டு பதறிப்போனார்கள். பெரியாரோ பொறுமையாகவே பதில் சொல்லிவிட்டு சென்னைக்குப் பயணமானார். வாழ்க்கை முழுவதும் புயல்களை சமாளித்தவர் அல்லவா பெரியார்! நேரம் தவறாமை நேரந்தவறாமையிலும் சுறுசுறுப்பிலும் பெரியாருக்கு இணை பெரியாரே! ஒரே நாளில் பல நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் போதுங்கூட கூட்டங்களுக்குக் குறித்த நேரத்தில் போய்விடுவார். காலந்தாழ்த்தி வரும் பேச்சாளர்கள் எவ்வளவு பெரியவர்க ளானாலும் அவர்களைப் பெரியாருக்குப் பிடிக்காது. மக்களைக் காக்கவைப்பது பெருங் குற்றம் என்பது பெரியாரின் கருத்து. அப்படிக் காக்கவைப்பது, அவையோரை மதியாமையின் வெளிப்பாடு என்பது அவருடைய முடிவு. எனவே நேரங் காத்தலில் பெரியார் முனைப்பாகவும் விழிப்பாகவும் இருந்தார். சோம்பல் என்பதையே அறியாத மாமனிதர் பெரியார். ஆறு மணி மட்டுமே அயர்ந்து தூங்கிவிட்டு, மற்ற நேரம் எல்லாம்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/215
Appearance