உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை 1914இல், தாசில்தார், டெப்டி தாசில்தார் பதவிகளில், 349 இடங்களில் பார்ப்பனர்களும், 154 இடங்களில் பார்ப்பனரல்லாத இந்துக்களும் இருந்தார்கள். அதுபற்றிய பட்டியலைப் பார்ப்போம். பட்டியல் 2 1917இல் முக்கிய அரசு பதவிகளின் பகிர்வு பதவி பார்ப்பனர் பார்ப்பனரல்லாத இந்துக்கள் இந்திய கிறுத்துவர் முஸ்லீம்கள் பார்ப்பனரல்லாதார் விழுக்காடு தாசில்தார் (சிரஸ்ததார் உட்பட) 135 69 14 12 41-3 துணை தாசில்தார் 214 65 21 10 30.9 ஆங்கில தலைமை எழுத்தர் 16 5 I 33:3 மாவட்ட வழக்கு மன்ற சிரஸ்ததார் 13 I 2 40.9 சார்பு வழக்கு மன்ற சிரஸ்ததார் 15 1 1 25 ஆதாரம்: எம்.ஆர்.ஒ. உள்துறை (பலவகை) சாதாரண இணைப்பு. அரசு ஆணை. மாவட்ட வழக்கு மன்றங்களில், கோட்ட வழக்கு மன்றங்களில், ஆங்கில தலைமை எழுத்தர், ஷெரிஸ்த தார் என்ற பதவிகள் இருந்தன. அவற்றிலும் எல்லா சாதிகளுக்கும் சரியான பங்கு கிடைக்கவில்லை. சமுதாயத்தில் நூற்றுக்கு மூவராகிய பார்ப்பனர்களுக்கு 44 பதவிகளும் மிகப் பெரும்பாலோருக்கு 16 பதவிகளும் கொடுக்கப்பட்டிருந்த கொடுமையைக் கண்டார்கள். 23