24 புரட்சியாளர் பெரியார் ஒரு காலகட்டத்தில் நெல்லூர் மாவட்ட தண்டல் நாயகரின் அலுவலகத்தில் ஓர் பார்ப்பனர், தலைமை எழுத்தராகப் பணி புரிந்துகொண்டிருந்தார். அது ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தது மாதிரி இருந்தது. அவர் விரைவாக, எங்கெங்கோ இருந்த பங்காளிகளை, தாயாதிகளை, நெருக்கமான உறவினர்களை மாவட்ட, வட்ட வருவாய்த் துறைகளில் நுழைத்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாற்பத்தி மூவர் இப்படி இடம் பெற்று விட்டார்கள். மாவட்ட நிர்வாகம், அந்த ஒரே குடும்பத்தின் விருப்பு வெறுப்புப்படி நடந்தது. இப்படி சில ஆண்டுகள் நடந்த பிறகே, அந்த மாவட்டத் தண்டல் நாயகம் விழித்துக்கொண்டார். நீதிக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே, ஆதி திராவிடர்கள் ஓரளவு விழித்துக்கொண்டார்கள். வெள்ளைக் கிறுத்தவப் பா திரி கள், அவர்களில் பலருக்கு எழுத்தறிவு கொடுத்தார்கள். அது மட்டுமா? தங்கள் வீட்டுச் சமையல்காரர்களாக வைத்துக்கொண் டார்கள். தங்கள் வீடுகளில் தாழ்த்தப்பட்டோர்' தாராளமாகப் புழங்கவிட்டார்கள். அதைக் கண்டபோது, சொந்த நாட்டுக் காரர்கள், கொடுமையாக நடத்துவது உள்ளத்தில் தைத்தது. நூற் காவல், தோட்ட வேலைகளே, தங்களுக்கு ஒதுக்கப்படுவதைப் பற்றி ஆதி திராவிடர்கள் குறைப்பட்டார்கள். சென்ற றாண்டின் கடைசி பத்தாண்டுகளில், 'தாழ்த்தப்பட்டவர்கள்' பெருமளவு இல்லாவிட்டாலும் ஓரளவு விழிப்புற்று, தங்கள் உரிமை களைப்பற்றி பேசத் தலைப்பட்டார்கள். அவர்களுக்காக 'பறையன்' என்னும் தமிழ் இதழும் நடந்தது. நீதிக் கட்சி தோற்றம் . பதவிகளை இழந்து பரிதவிக்கும் பொதுமக்கள், பல்வேறு காரணங்களால் விழிப்படையவும் பதவிகளில் பங்கு கேட்கவுமான நிலை உருவானபோது, நீதிக் கட்சி தோன்றியது. அதைத் தோற்று வித்த டாக்டர் டி. எம். நாயரோ, திரு. தியாகராயச் செட்டி யாரோ, டாக்டர் நடேசனாரோ, பிற தலைவர்களோ, தங்கள் வீட்டுப் பிள்ளைகள் பிற்காலத்தில் வேலையில்லாது திண்டாடுமே என்று அஞ்சி, அதற்கு முன்னேற்பாடாக நீதிக் கட்சியைத் தொடங்கவில்லை. பங்கா இழுக்கும் வேலையையும் கடைநிலை ஊழியத்தையும் மற்றவர்களுக்கு விட்டுவிட்டு, எழுத்தர் முதல் நீதிபதிவரை ஒரு சிறு பிரிவினர்கள் அதாவது பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக்கொண்ட தோடு அவர்களில் சிலர் ஆட்டியபடியே எல்லாம் நடக்கும் நிலை அவர்களுடைய பிறவிப் பெருமையை அகந்தையாக்கிவிட்டது. இத் தனையும் சேர்ந்து நீதிக் கட்சியை வளர்த்தது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/36
Appearance