உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை மாணவன் ஈ.வே.ரா. 25 இத்தகைய சமூக, பொருளியல், அரசியல் சூழலில் ஈ. வே. ராமசாமி பிறந்து வளர்ந்து உருவானார். வழி வழி செல்வராக வருவோர்க்கு இருக்கும் பக்தியைக் காட்டி லும் புதுச் செல்வம் பெற்றோர்க்கு பக்தி மேலிடல் இயல்பு. வேங்கடப்பர் குடும்பம் இதற்கு விலக்கல்ல. அவர் வீட்டை நாடி பரதேசிகள், துறவிகள், புலவர்கள், புராணீகர்கள் வருவது நாள் தவறாத நிகழ்ச்சி. இத்தகையோர் கூடினால் ஊமையாக இருப் பார்களா? இருக்கமாட்டார்கள். வாழ்த்துக்கள், வாதங்கள்; அறிவுரைகள், விளக்கவுரைகள், ஒரே சொற்றொடர்க்கு வெவ்வேறு பொருள்கள், இப்படியாகக் கொட்டுவார்கள். சின்னஞ்சிறு ராமசாமியின் காதுகளில் இவை வீழ்கின்றன. வீழ்ந்த சொற்கள் கருத்துக்கள், எண்ண அலைகளை எழுப்புகின்றன; அடுத்தடுத்து எழுப்புகின்றன. இந்நிலையில் உங்களுக்குத் தெரிந்த குழந்தையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தாய் தந்தையரை, தாத்தாவை பாட்டியை, அத்தையை மாமாவை, எதிர்வீட்டுக் கூட்டாளியை அடையாளம் தெரிந்துகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. கேட்கும் சொற்களின் வேறுபாடுகளை உணரும் தன்மையைப் பெற்று விட்டது. அந்நிலையில் அது என்ன செய்யும்? புதிய சொற்களின் பொருட்களைத் தெரிந்துகொள்ளத் துடிக் கும், 'சர்க்கஸ்' என்றால் என்ன? நாடகம் என்றால் என்ன? கண் காட்சி என்பது என்ன? இப்படிக் கேள்விமேல் கேள்வி போட்டுத் துளைக்கும். இவற்றோடு நிற்குமா? மேலே பார்க்கிறது. கண் ணுக்கு எட்டாத உயரத்திற்கு வளர்ந்துள்ள மலையைக் காண் கிறது. அது என்ன என்று வியப்போடு கேட்கும். அங்கே போக லாம் என்று நச்சரிக்கும். அங்கே விளையாட இடம் இருக்குமா? அங்கேயும் பஸ்ஸும் லாரியும் பாய்ந்து வருமா? மலை உயர்ந்து நிற் பானேன்? கடல் தாழ்ந்திருப்பானேன்? இப்படி கேள்விமேல் கேள்வி அடுக்கிக்கொண்டே போகும். விளக்கைத் தொடாதே சுடும் என்று தாய் எச்சரிக்கிறாள். பெரும்பாலான குழந்தைகள் அப்படியே அடங்கிக் கிடக்கின்றன. எப்போதோ ஓர் முறை துடுக்குக் குழந்தையொன்று திறந்த விளக் கைத் தொட்டுவிட்டுத் துடிக்கிறது. அதேபோல், வீட்டுக் கொசு, கடித்தால் கதறும் குழந்தை, கொசுவை அண்டவிடக்கூடாது என்று தெரிந்துகொள்ளும். க