காங்கிரசு பணி தியாகம் சு 33 ஒத்துழையாமையின் மற்றோர் கூறு, வழக்கு மன்றங்களை ஒதுக்குதல். ஆங்கில ஆட்சியின்கீழ் நடக்கும் வழக்கு மன்றங் களுக்குச் சென்று வழக்காட மறுப்பதன் வழியாக, நாட்டு மக்கள் தங்கள் உரிமை உணர்வை உலகறியச் செய்யவேண்டுமென்று காந்தியார் விரும்பினார். ஈ.வே. ராமசாமிக்கு அது ஆணை. அவருடைய குடும்பத்திற்கு, கடன் பத்திரம், அடமானப் பத்திரம் ஆகியவற்றின் மூலம் அய்ம்பதாயிரம் ரூபாய்கள்போல் வசூலாக வேண்டும். அவை, காலாவதியாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. உடனடியாக, வழக்குத் தொடராவிட்டால், அவ்வளவு பணமும் தொலைந்துவிடும். ஈ.வே.ராவுக்கு வேண்டிய, சேலம் விஜயராகவாச்சாரியார் முந்தியவருக்கு ஓர் ஆலோசனையைக் கூறினார். அது என்ன? 'அப்பத்திரங்களை நம்பிக்கையான ஒருவருக்கு மாற்றிக் கொடுத்துவிடுங்கள். அத்தகைய நண்பரை நான் அழைத்து வருகிறேன். அவர் தன் பொறுப்பில் வழக்காடி, சேரவேண்டிய தொகையைப் பெற்றுத் தருவார். உங்களுக்குப் பழி வராது. பணத்திற்கு நான் பொறுப்பு' என்றார், அந்தப் பெரிய மனிதர். ஈ.வே. ராமசாமி, கரவு அறியாத பெருந்தகை ; எனவே, தானும் வழக்கு மன்றத்திற்குப் போகவில்லை. மற்றொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து, சூதாகத் தொகைகளைப் பெறவும் இல்லை. வழக்கு மன்றங்களுக்குப் போகக்கூடாது என்ற காந்தியத் திட்டத்தைப் பின்பற்றியதால், ஈ.வே.ராவுக்கு ரூபாய் அய்ம்பதாயிரம் இழப்பு நேரிட்டது. சிக்கனக்காரராகிய பெரியார், தேவைப்படும்போது எவ்வளவு பெரிய இழப்பிற்கும் பின்னடைய மாட்டார் என்பது தெளிவாயிற்று. மதுவிலக்கு மதுவிலக்கு காந்தியத் திட்டங்களில் ஒன்று. அது ஈ. வே. ராவுக்குப் பிடித்தமானது. 1921இல் ஈரோட்டில் ஈ. வே. ரா. கள்ளுக்கடை மறியலுக்குத் தலைமை தாங்கி நடத்தினார். அரசு வழக்கம்போல் 144 தடை உத்தரவைப் போட்டது. பெரியாரின் தொண்டர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. எண்ணற்ற தொண்டர்கள் சிறை சென்றார்கள். அதே ஆண்டு நவம்பரில் ஈ.வே. ராமசாமியும், அவரோடு கிட்டத்தட்ட நூறு தொண் டர்களும் சிறைப்பட்டார்கள். பெரியார் ஒரு மாத தண்டனை 3
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/45
Appearance