34 புரட்சியாளர் பெரியார் பெற்றார். மதுவிலக்குப் போராட்டத்தில்தான் பெரியார் முதன் முறை சிறைப்பட்டார் என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். அதோடு மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் ஈடுபடச் செய்தார். இவர்களுடன் பல பெண் மணிகளும் மறியலுக்குச் சென்றார்கள். நாகம்மையாரையும் அவருடன் சென்றவர்களையும் சிறைப்படுத்தினால் பதினாயிரக் கணக்கானவர்களைச் சிறைப்படுத்த நேரிடும்; ஈரோட்டின் நிலைமை கட்டுக்கடங்காது என்று அதிகாரிகள் அஞ்சினார்கள். எனவே சென்னையில் உள்ள அரசுக்குத் தந்தி கொடுத்து முன் உத்தரவுப் பெற்று தடையுத்தரவை நீக்கினார்கள். வாய்தா காலம் முடிவதற்குள் தடையுத்தரவை நீக்கியது இதுவே முதன் முறையாகும். து ஆங்கில ஆட்சிக்கு மண்டையிடி அதிகமாயிற்று. எனவே சர் சங்கரன் நாயரை காந்தியாரிடம் தூது அனுப்பிற்று. அவர்கள் பேசியவற்றில் ஒன்று, ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலை நிறுத்துவதுபற்றியாகும். 'கள்ளுக்கடை மறியலைத் தொடர்வதா நிறுத்துவதா என் பதைப்பற்றி முடிவு செய்யவேண்டியவர்கள் ஈரோட்டிலுள்ள நாகம்மாள், கண்ணம்மாள் என்னும் இரு பெண்மணிகளே ஆவார்' என்று காந்தியடிகள் பதில் கூறிவிட்டார். ஏன்? பொது வாழ்க்கைக் கிளர்ச்சியில் அதுவும் கள்ளுக்கடை மறியலில் பங்குகொண்ட இந்திய மாதர்களில் நாகம்மாளும் கண்ணம் மாளுமே முன்னவர்கள் ஆவார்கள். மதுவிலக்குப் போராட்டத்தில் ஈ.வே. ராமசாமி மற்றொரு தியாகமும் செய்யவேண்டியதாயிற்று. தென்னந்தோப்பை அவர் குடும்பத்திற்குச் சொந்தமான முன்னரே, கள்ளிறக்க விட்டிருந்தார்கள். குத்தகைக்காரருக்கு இழப்பு ஈடு கொடுப்பதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு கள் ளிறக்குவதை விட்டுவிடவும் ஈ. வே. ரா. வேண்டினார். அரசின் அதிகாரிகள், குத்தகைக்காரரை வேறு பக்கம் நெருக்கினார்கள். ஆகவே குத்தகைக்காரர் ஈ. வே. ராவின் கருத்திற்கு ஒப்பவில்லை. ஆனால் ஈ.வே.ராவோ தோப்பிலுள்ள அய்நூறு மரங்களையும் இரவோடு இரவாக வெட்டி வீழ்த்த ஏற்பாடு செய்துவிட்டார். அதனால் முப்பது நாற்பது ஆண்டுகளின் வருமானம் பாழ். தெரிந்தே, ஈ.வே. ரா. இத் தியாகத்தை மேற்கொண்டார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/46
Appearance