36 புரட்சியாளர் பெரியார் கேரளத்தில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் கோயிலைச் சுற்றி யுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்பது நெடுநாளைய கட்டுப்பாடாக இருந்து வந்தது. அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்பட்டவர்கள் சுயமரியாதை உணர்ச்சிகொண்டனர். தெருவில் நடக்கும் உரிமைபெற விரும்பி னார்கள். அதற்காக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்குவ தென்று கேரள காங்கிரசு தலைவர்கள் முடிவு செய்தார்கள். அப்படியே தொடங்கினார்கள். காலஞ்சென்ற ஜார்ஜ் ஜோசப் உள்பட பத்தொன்பது பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலைவர் இல்லாத திண்டாட்டத்தால் மறியல் நின்றுவிடும் போலாகிவிட்டது. அந்நிலையில் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் ஈ.வே. ராமசாமியின் உதவி தேவைப்பட்டது. ஈ.வே. ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்த ஈ.வே. ரா., தன்னேரிலாத, காங்கிரசுத் தொண்டு ஆற்றினார். எனவே தமிழ்நாடு காங்கிரசின் குழுவிற்கு ஈராண்டு செயலாளராகவும், ஈராண்டு தலைவராகவும் விளங்கினார். தலைவராகச் சூறாவளிப் பயணஞ் செய்துகொண்டிருந்த ஈ.வே.ராவுக்குக் கேரளப் பகுதியிலிருந்து தந்தி ஒன்று வந்தது. அது, அழைப்புத் தந்தி. ஈ. வே. ரா. எதற்கு அழைக்கப்பட்டார்? தீண்டாமை ஒழிப்புப் போர் நடத்த அழைக்கப்பட்டார். அழைத் தது எவர்? குரூர் நீலகண்ட நம்பூதிரிபாத் என்பவர். 4-4-1924 அன்று அவரிடமிருந்தது அழைப்புத் தந்தி வந்தது. ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்குப் போகாமல் வேறு நிகழ்ச்சிக்குப் போவது, பெரியார் அறியாத பழக்கம். எனவே முன்னரே ஒப்புக்கொண்ட, குளித்தலையில் நடந்த, திருச்சி மாவட்ட மாநாட்டிற்குச் சென்று விட்டார். 'நான் வந்துதான் ஆகவேண்டுமென்றால், நான் புறப்படு கிறேன்' என்று பதில் தந்தி கொடுத்துவிட்டு குளித்தலைக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்தபோது, அழைப்புக் கடிதம் காத் திருந்தது. தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைவர் என்ற நிலையில் கொள்ளை வேலை காத்திருந்தது. எனவே பழைய பதிலையே எழுதினார். 12-4-1924 அன்று மறுபடியும் நம்பூதிரிபாத் இடமிருந்து தந்தி வந்தது. 'வைக்கம் போராட்டம்பற்றிய பொதுக்கூட்டம் திங்கட்கிழமை நடக்கிறது, கலந்துகொள்ள வேண்டுகிறோம். பதில் தந்தி கொடுக்கவும்.' கொச்சியிலிருந்து மற்றோர் தந்தி வந்தது. திரு. டி. ஆர். கிருஷ்ணசாமி அய்யர், 'ஜோசப் கைது செய்யப்பட்டுவிட்டார். தங்கள் வருகை தவிர்க்கமுடியாதது. உடனே புறப்படுக. கொச்சியில் தங்களுக்காகக் காத்திருப்பேன்' என்று தந்தி கொடுத்தார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/48
Appearance