உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரசு பணி 37 அன்றே புறப்படுவதாக ஈ. வே. ரா. தந்தி கொடுத்தார். திருச்சூர் புகை வண்டி நிலையத்தில் வந்து காணும்படி நீலகண்ட நம்பூதிரிபாத்துக்கு தந்தி போயிற்று. ஈ.வே.ரா. புறப்படும் முன், மூன்றாவது தந்தி வந்தது. என்ன சொல்லிற்று? 'நிலைமை மிக மோசமாகிவிட்டது. எல்லாத் தலைவர்களும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். பதினெட்டு சத்தியாக்கிரகிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டுள்ளார்கள். நான் வைக்கத் திற்குப் புறப்படுகிறேன். என்னை உடனடியாகக் கைது செய்ய லாம். போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள். தந்தி வழி அறிவுரை தருக. 'தமிழ்நாட்டில் நிறையப் பொறுப்புகள் உள்ளன. இடர்ப்பாடு களும் நிறைய. எவ்வித தீங்கும் விளைவிக்கக்கூடாத கதர் இயக்கத்திற்குக்கூட எதிர்ப்பும் இடையூறும் கிளம்பியுள்ளது நினைவில் இருக்கிறது. இவற்றையெல்லாம் போட்டுவிட்டு, அங்கே போவதைப்பற்றி தவறாகக் கருதவேண்டாம். பக்கத்திலுள்ள கேரளத்தின் அழைப்பை ஆணையாகவே கொள் கிறேன். காந்தியத் திட்டங்களில் முக்கியமான தீண்டாமை யொழிப்பில் ஜோசப் போன்ற தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அங்கே அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. நிலைமை மிக மோசமாகியுள்ளது. இவை என்னை அங்கே போக வைக்கிறது. நானும் கைது செய்யப்படலாம். அதைப் பொருட்படுத்த மாட்டேன். தலைவர்களே! பிரசாரகர்களே! தொண்டர்களே! அனுதாபிகளே! உடனே வைக்கத்திற்கு வந்து சேருங்கள். வர இயலாதவர்கள் பொருள் உதவி செய்யுங்கள். இப்புனிதப் போராட்டத்தில் பங்குகொள்ளும் அரிய வாய்ப்பினை சிக்கெனப் பற்றுங்கள்' என்ற விளக்கத்தையும் வேண்டுகோளையும் இந்து நாளிதழுக்கு அனுப்பிவிட்டு, வைக்கம் நோக்கிப் புறப்பட்டார் பெரியார். வைக்கம், அன்றைய திருவிதாங்கூர் இராச்சியத்தைச் சேர்ந்தது. அந்த இராச்சியத்தின் மன்னர், ஈ.வே.ராவுக்கு மிகவும் வேண்டியவர். கொள்கை என்று வரும்போது, எத்தகைய தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாத இயல்பினர், ஈ.வே.ரா. தனக்கு வேண்டிய மன்னருக்குத் தொல்லை கொடுப்பதைப் பற்றி கவலைப்படாது. இங்கே வேலை நிறைய என்று சாக்குச் சொல்லாமல், வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்க போனார் ஈ. வே. ரா. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னர்