தன்மான இயக்கப் பணி 55 முதலில் குரல் கொடுத்தது, நீதிக் கட்சியாகும். அக்கட்சித் தலைவர்கள், 'இவரைத் தொடலாம், அவரைத் தொடக்கூடாது" என்னும் மனப்பான்மையில் இருந்து விடுபடத் தொடங்கிய முன்னோடிகள் ஆவார்கள். சமபந்தி சிறு ஈ.வே. ராமசாமிக்கு சாதிக் கட்டுப்பாடு உடைப்பு. வயதிலேயே இயற்கையாகிவிட்டது. அப்போக்கை வைக்கம் போராட்டம் முடுக்கிவிட்டது. எனவே அவரது தன்மான இயக்கத் தைச் சேர்ந்த என் போன்றோர்களுக்கு புழங்குவதிலோ, உண்ப திலோ, எவ்வித சாதிக் கட்டுப்பாடும் நினைவுக்கு வந்ததில்லை. தன்மான இயக்கமே, சமபந்தி உணவை பொது நடவடிக்கை ஆக்கிற்று. நாம் அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோரின் மெய்யான பாதுகாப்பு தன் மான இயக்கமே; உண்மையான தோழர்கள், பெரியாரின் சீடர்களே! அந்நிலை எப்படி உருவாயிற்று? 19-1-36இல் வெளியான குடியரசு தலையங்கம் தெளிவுபடுத்து கிறது. அத்தலையங்கம், எதையும் மிகைப்படுத்தவில்லை. உள்ளதை உள்ளபடியே உரைக்கிறது. அது காட்டும் கசப்பான உண்மைகள் இதோ: வேறு; 'எந்த காங்கிரசு கூட்டத்திலாவது, பிராமணர்கள் மற்றவர்கள் வேறு என்கிற பிரிவு இல்லாமல், பிரிவு இல்லாமல், உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கிறார்களா?' 'காங்கிரசு கான்பரன்ஸ்' முதலிய எந்தக் கூட்டங்களிலும் பார்ப்பனர்களைக்கொண்டுதான் சமையல் செய்திருக்கிறார்களே ஒழிய, மற்ற சாதிக்காரர்களை சமையல் வீட்டில், நுழைய விட் டிருக்கிறார்களா? 'சுயமரியாதை மகாநாடுகளையோ, கூட்டங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். நாடார், நாயுடு, முஸ்லீம், தீண்டாப்படாதார் என்கின்றவர்கள் எல்லோரும் கலந்து சமையல் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருமே கலந்து பரிமாறுகிறார்கள். சைவர் முதல் பெரிய சாதிக்காரர்கள் என்பவர்களும் ஒன்றாய் உட்கார்ந்துதான் சாப்பிடுகிறார்கள்.' மனிதர்களை மனிதர்களாக நடத்தியதோடு, அந்நிலை சமுதாயத்தின் பொது பொது நடைமுறையாகிவிட வேண்டுமென்ப தற்காக, ஏச்சையும் பேச்சையும் தாங்கிக்கொண்டு, தொண்டு புரிந்தது தன்மான இயக்கம். பல்லாண்டு காலம் அவ்வியக்கத்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/67
Appearance