56 புரட்சியாளர் பெரியார் தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளாத, 'தாழ்த்தப்பட்டோர் அல்லது ஆதி திராவிடர்' நடத்தும் நிகழ்ச்சிகள் இரா. பெருந்துறைக்குப் பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் ஓர் ஆதி திராவிட குடியிருப்பு அமைக்கப்பட்டது 8-3-31 அன்று அதன் முதல் ஆண்டு விழாவிற்கு ஈ. வே. ராமசாமி சென்றார். எப்படி? ஒற்றை மாட்டு வண்டியில் அத்தனை தூரப் பயணம்: வேறு வழியில்லை. அப்போது பெரியாருக்கு வயது அய்ம்பத்து இரண்டு. செல்வத்தில் திளைத்த ராமசாமி அவ்வயதிலும் காட்டு வழியில், ஒற்றை மாட்டு வண்டியில், அவ்வளவு தூரம் சென்றார். ஆதி திராவிடர்களுக்கு நம்பிக்கை சுரப்பதில் வியப்பேது. பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமை வகித்த அல்லது கலந்துகொண்ட ஆதி திராவிட மாநாடுகளும் ஆண்டு விழாக்களும் பொதுக்கூட்டங்களும் ஏராளம் ஏராளம். அவர் போனால், பேளுக்குறிச்சி மிட்டாதார் ஜே.பி. சோமசுந்தரம், மீனாம்பள்ளி நிலக்கிழார் சப்தரிஷி ரெட்டியார், திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம், டி.பி.வேதாசலம், பூவாளூர் பொன்னம்பலம், பட்டிவீரன்பட்டி W.P.A. சௌந்தரப் பாண்டியன், சர் பி. டி. ராஜன், குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, சிவகங்கை வழக்கறிஞர் ராமசந்திரன், ஆகிய பெரியவர்களில் சிலரோ, பலரோ உடன் சென்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் ஆதி திராவிட மாநாட்டில் திரு ஆ. இராமசாமி முதலியாரும் கலந்துகொண்டார். தன்மான இயக்கத்தவர்கள் மனிதர்களை சமமாக நடத்துவதில் பழைய சூட்டோடு இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இருந்தும் இன்னும் கொடுமைக்கு ஆளாகி வரும் ஆதி திராவிடர்கள் வெவ்வேறு கூடாரங்களில் சிதறிப்போய் வலி விழந்து உள்ளார்கள். ஏன் அப்படி? தனித் தொகுதி தயவு தன்னாட்சி இந்தியாவில், தேர்தலில், பொதுத் தொகுதிகளில், ஒதுக்குத் தொகுதிகள் உள்ளதை நாம் அறிவோம். இன்றைய நிலையில் தேர்தல் வெற்றிக்கு பழமை விரும்பிகளின் பெரிதும் உதவியாகும். சமுதாயக் கண்ணோட்டத்தை இழந்து, தனி மனித வளர்ச்சி வலைக்குள் வீழ்வது மனிதனுடைய இயற்கை யான குறைபாடாகும். நெடுங்காலமாகத் தாழ்த்தப்பட்டவர்கள், இத்தகைய ஆதாயங்களுக்காகச் சிதறிக் கிடக்கிறார்கள். எனவே, அம்பேத்காரோ, இரட்டமலை சீனிவாசனோ, என். சிவராஜோ, மீனாம்பாள் சிவராஜோ, மதுரகவி முருகேச பாகவதரோ, வீ. வீராசாமியோ, ஆதி திராவிடர்களுக்குப் போராடிய அளவு, போராடும் வலிமை, இக்காலத் தலைவர்களுக்கு இல்லை.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/68
Appearance