உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi நூன்முகம் இந்த இலட்சக்கணக்கான ஆண்டுகளில், உலகில் பிறந்தவர்கள் எத்தனையோ ஆயிரம் கோடி பேர்கள் ஆவார். மறைந்தவர் களும் கணக்கில் அடங்கார். இன்று இருப்போர் 400 கோடி பேர்களாவார். எண்ணி முடியாத கோடி கோடி மக்கள் பிறந்து, இருந்து, மறைந் தார்களே! அவர்களுடைய கதை என்ன? ஒன்றுமில்லை; ஆம், சொல்ல ஒன்றுமில்லை. யார் வயிற்றிலோ பிறந்தார்கள்; எவர் உழைப்பிலோ பிழைத்தார்கள்; எப்படியோ எங்கேயோ மறைந் தார்கள். வெறும் வேடிக்கை மனிதர்கள் எத்தனையோ கோடி. அவர்கள் இருந்ததால் உலகுக்கு நன்மை இல்லை; மறைந்ததால் இழப்பும் இல்லை. மனித மா கடலின் நடுவே, சிலர் மட்டுமே ஒளியோடு வாழ்ந்தது, ஒரு விந்தை; சிறப்பாக வாழ்ந்தார்கள்; சிந்தனையைப் பயன் படுத்தி வாழ்ந்தார்கள்; அத்தகையோர் சிந்தனையை தன்பால் குவிக்காமல், சுற்றி வாழும் மக்கள்பால் பாய்ச்சினார்கள். அவர்கள் நிலையை உணர்ந்தார்கள். பிறர் நோயை தன்னோ யாகக்கொண்டார்கள். நோய் நாடி, முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடித் தொண்டாற்றினார்கள். பிறர்க்கென வாழும் தொண்டில், பருவம் நாடிக் காத்திராமல், சுகம் தேடிச் சோம்பி யிராமல், ஏச்சையும் பேச்சையும் துச்சமாகத் தள்ளிவிட்டு, கருமமே கண்ணாயிருந்து, செயற்கரிய செய்த பெரியார் சிலரையே மக்கள் இன வரலாற்றில் காணலாம். அத்தகைய, 'தனக்கென முயலாது, பிறர்க்கென முயலுனர் உண்மையால் உண்டாலம்ம இவ்வுலகம்' என்னும் பழந்தமிழ் பாடல், மாற்றுக்குறையாத உண்மை. செயற்கரிய செய்த பெரியோர், மறைந்தும் மறையாது, எண்ணற்றோர் உள்ளங்களில், உணர்வுகளில், கருத்தோட்டங் களில் இரண்டறக்கலந்து வாழ்கிறார்கள். ஓ எப்போதோ ஓர் முறை, எங்கோ ஓரிடத்தில், தோன்றும் வழி காட்டிகளில் ஒருவர், நம்மிடையே தோன்றினார்; நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார்; தொண்டு நிறைந்த, இடையறாத தொண்டு செறிந்த, வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் தொண்டில் திளைத்த, பெருவாழ்வு வாழ்ந்தார். தொண்டு செய்து பழுத்த பழமாக விளங்கிய நம் தந்தை, 'அறிவில் வயதில் பெரியார்; வாய்மைப் போருக்கு என்றும் இளையார்' என்பது உலகறிந்த 'அவர் மண்டைச் சுரப்பை உலகம் தொழும்' என்பதும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி நம்மோடு வாழ்ந்தவர். நம்மில் ஒருவராக வாழ்ந்தவர்; நம்மிலிருந்து விலகி உயர அமர்ந்து