உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 59 சிவக்கொழுந்துவை அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறோம். நீங்கள் பாட்டிலே ஊர்வலம் போங்களேன்' என்று கடுமையாகச்சொல்லி அனுப்பிவிட்டார்கள். இதிலே பெரியாருக்கு என்ன ஆதாயம்? என்ன பெருமை? சமத்துவக் கொள்கையிலிருந்த பற்றன்றோ எரிமலையாக, அப்போதும் எப்போதும் வாழ்நாள் முழுவதும் முழங்கவைத்தது. இப்போது திருமண ஊர்வலத்திற்குச் செல்வோம். வைத்த மேளத்தை நிறுத்திவிட்டு, திருமண ஊர்வலம் வருவது பெரும் இழிவு. எனவே, திருமண வீட்டுச் செட்டியார், துணிச்சலை, வலிந்து வரவழைத்துக்கொண்டார். 'நாயனக்காரர் விருப்பப்படி துண்டை போட்டுக்கொண்டே வாசிக்கட்டும். விருப்பமுள்ளவர்கள் கேட்கலாம்; போகிறவர்கள் போகட்டும்' என்று அறிவித்துவிட் டார் இழிவு துடைக்கப்பட்டது. மக்கள் ஒருநிலை நிலைநாட்டப் பட்டது. கலைஞர் சிவக்கொழுந்து, இன்பப் பெருக்கில், இனிமை யின் சிகரத்திலே நடமாடி வாசித்துப் பெருமைப்பட்டார். சாதி வெறி பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறக் காரணமாயிருந்த, விலகத் தூண்டிய உயர் ஜாதி உணர்வு வ.வே.சு. அய்யரிடம் மட்டுமா இருந்தது? அது, மற்ற பெரி மனிதர்களைக்கூட ஆட்டிப் படைத்தது தெரியுமா? காந்தியார், முதன்முறை சென்னைக்கு வந்தபோது, எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ்வாரத்தில் தான் உட்கார்ந்திருக்கவேண்டியதாயிற்று. இரண்டாம் முறை வந்தபோது காந்தியார் எப்படி நடத்தப்பட்டார்? 16-9-27இல் காந்தியாரை, நீதிக் கட்சித் தலைவர்களான திரு வாளர்கள் பன்னீர்செல்வம், உமாமகேசுவரம் பிள்ளை, கார்குடி, சின்னையா, சையத் தாஜுதின், ஆகியோர் தஞ்சையில் கண்டு, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் விவகாரம்பற்றி உரையாடி னார்கள். பார்ப்பனரல்லாதார் போராட்டத்தின் காரணங்களை தமிழ்த் தலைவர்கள் விளக்கினார்கள். பார்ப்பனர்கள் மாறி வருவ தாக மதிப்பிட்ட காந்தியார், அதற்குச் சான்றாகக் காட்டியதைக் காண்போம்: 'பிராமணரல்லாதாரே, இந்த இயக்கத்தைப்பற்றி பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர்-பிராமணரல்லாதாருக்கிடையே இப் போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார்.