உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புரட்சியாளர் பெரியார் என்னைப்போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஈரோட்டு ராமசாமி, தென்னாட் டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு மனநிறைவு தரக் கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றும் இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். கூறுகிறார். வந்தபோது, சில ஆண்டுகளுக்குமுன், நான் சென்னைக்கு எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட் கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே, நினைத்துப் பழகிவருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப் பங்கரை வரை செல்கிறாள். அன்று (16-9-1927) மாலை தஞ்சையில் காந்தியார் பேசிய பொதுக்கூட்டத்தில் பின்வருமாறு உரைத்தார்: 'ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது பிராமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்!' இப்படிக் காந்தியார் கண்டித்தார்; நம்பிக்கையொளியைக் காட்டினார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல; எல்லா மின்ன லும் மழையில் முடிவதில்லை. இதை இன்றும் நாம் நாள்தோறும் உணருகிறோம். காவிரிக்கரையில், சாதிப் படித்துறைகள் தனித் தனியே. ஏன் சுடுகாட்டிலும் தனித்தனி சுடுகாடுகள்; தனித்தனி இடுகாடுகள்; தனித்தனி புதுக் குடியிருப்புகள். இன்றைக்கும் இவைகளைப் பொறுத்துக்கொண்டிருக்கவேண்டுமா? பிறர் மனம் புண்படுமே என்று எண்ணி, சூத்திரர்களாகவே ஒதுங்கிப்போக வேண்டியதுதானா? ஈ. வே. ராமசாமி, காந்தியின் உண்மைச் சீடராக விளங்கி, காங்கிரசின் சார்பில் தீண்டாமை விலக்கைப்பற்றி வன்மையாகப் பேசியதை உங்கள் நினைவுக்குக் கொண்டுவருதல் என் கடமை. இதோ ஈ.வே. ராவின் முழக்கம்: 'மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத் தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம்