உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 71 இயலிலும் மகா பண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள், என்ப வர்களையெல்லாம் மாறிக்கொள்ளச் செய்திருக்கிறது. தோழர் காந்தியாரையே பல கரணங்கள் போடச் செய்துவிட்டது. 'பெண்கள் உலகில், உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பிவிட்டது. கீழ்சாதி, மேல்சாதி என்பவைகள் ஓடுவதற்குப் பந்தயம் போடுகின்றன. கிறுத்தவர்களும் முஸ்லீம்களும் பைபிளுக்கும் குர்ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டுவிட்டனர். காங்கிரசு தொல்லை இல்லாமல் இருந்திருக்குமானால், இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாகக் கலக்கியிருக்கும் என்பதோடு, பார்ப்பனீயம் அடியோடு மாண் டிருக்கும் என்றே சொல்லலாம்.' மேற்கூறியபடி மதிப்பிட்ட பெரியார், சுயமரியாதை இயக்கத் தின் எதிர்காலப் பணிக்குத் திசைகாட்டினார். சுயமரியாதை இயக்கம் இந்தியா முழுமைக்கும் பிரச்சாரம் செய்யப்போகின்றது. அது, தனது பழைய வாலிபர்கள் பெரும் பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்துவிட்டதால், புதிய வாலிபர் களைச் சேகரித்துக்கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சமயம் 'குறை' ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குக் குறை ஏற்படாது. 'வாலிபர்களே தயாராய் இருங்கள்' என்று ஆணையிட்டார் பெரியார். அவ்வாணை செயல் படும் காலம் விரைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கத்தின் எதிர்காலப் பணிக்குப் பெரியார் காட்டிய திசை என்ன? சமதர்மத் திசையை பெரியார் காட்டினார்.