4 சமதர்மப் பணி மனிதர்கள் அனைவரும் வாழவேண்டும்; பிறவி ஏற்றத்தாழ்வு அற்று வாழவேண்டும்; எல்லோரும் சமத்துவமாக வாழவேண்டும்; இக்குறிக்கோளோடு தொடங்கிய தன்மான இயக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வுகளைத் தாக்குவதோடு நிற்கமுடியுமா? முடியாது. கோடானுகோடி மக்களுக்கு வேலை இல்லை; வேலை கிடைத் தாலும் போதிய ஊதியம் இல்லை. ஆகவே, பொதுமக்களுக்குச் சோற்றுப் பஞ்சம்; உடையில்லாமை; வானமே கூரையாக, திறந்த வெளிக் குடியிருப்பு. இந்நிலை நீடிக்கும்வரை, மனிதர்கள் முழு வாழ்வு, ஏற்றத்தாழ்வு அற்ற வாழ்வு, வாழமுடியாது. இதைத் தன்மான இயக்கத்தின் தந்தை. ஈ. வே. ராமசாமி கடிதில் எளிதில் உணர்ந்தார். 1930ஆம் ஆண்டு மே திங்கள் நடந்த ஈரோட்டு சுயமரியாதை மாநாட்டில், அவர் நன்றியுரை ஆற்றினார். அவ்வுரையில்: 'இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும் மதத் தையும் சாமியையும் பண்டிதர்களையும் கண்டித்துக்கொண்டு மூடப் பழக்க வழக்கங்களையும் எடுத்துக்காட்டிக்கொண்டு, மூட மக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பதுபோலவே, என்றைக் கும் இருக்குமென்றோ அல்லது இவைகள் ஒழிந்தவுடன் இயக்கத் திற்கு வேலையில்லாமல் போய்விடுமென்றோ யாரும் கருதிவிடக் கூடாது' என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன். மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கிறவரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினிகிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டுச் சாயுமான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, வயிற்றைத் தடவிக்கொண்டிருக்கிறதும் ஆகிய தன்மை இருக்கிறவரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டி யில்லாமல் திண்டாடுவதும் மற்றொருவன் மூன்றுவேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாக திரிவதுமான தன்மை இருக்கிறவரை யிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக்கொண்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/84
Appearance