பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

'பெண்ணுங்கால், பிரியம் முக்கால்
பெண்மையி னியல்பென் னும்பார்;
பண்ணுங்கா 'லிதுபா ராட்டப்
படவேண்டு' மெனவே பண்ணி
யுண்ணுங்கா லுரையொன் றின்றி
யுண்டெழுந் ததனை யுள்ளத்
தெண்ணுங்கா லிதயம் புண்ணா
யெனைநோகச் செய்த' தென்றாள்.

உளமொன்றி யிருந்த என்றன்
ஓர்மையை யுனரா துற்றுக்
குளமொன்றி யிருந்த கோலக்
கோகனம் குவிந்த தென்ன,
வளமொன்றி யிருந்து வாழ்வில்
வருந்தாதாள் வருத்தங் கண்டே
அளி. முன்றி லிருந்த முல்லை
ஆர்தல்விட் டயர்ந்த தொத்தேன்.

"குழந்தையின் குறையைக் கொஞ்சம்
கூர்ந்தோர்த்து கொள்ளாத் தந்தை
கழிந்ததற் கிரங்கி நொந்த
கதை,காட்சி யாயிற் றம்மா!
இழந்ததுண் டென்னை நான்;மற்
றியல்பெனக் கிதுவென் றெண்ணா
தழிந்ததுன் சிந்தை! யாராய்ந்
தாற்றிக்கொள் ளறிவ றிந்தே!

தோமகந் தோய்ந்தி டாத
தூயசொல் தோகை யே!நான்
பாமுகங் கானம் குள்ளம்
பதியுங்கால் பயந்த திஃதே!
"காமுகன், கவிஞன், பித்தன்,
கருதினோ ரின"மென் றென்றோ
தேமகஞ் செய்த துண்டித்
நீணிலம் நிலையிஃ!" தென்றேன்.