பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

புழங்காது போடப் பட்ட
பொட்டலில் மழைபொ ழிந்து
முழங்காலை மறைக்க மூண்டு
முளைத்தபுல் முதிரா முன்போய்
ஒழுங்காக வுழுது விட்டங்
குடலோய்ந்த எருது கள்தாம்
மழுங்காது மேயுங் காலம்
மண்புகழ் மலர்வ தன்றே!

'கம் பொடு பயிரம் கண்டு,
கதிர்கொளக் காய்கள் கொள்ளக்
கும்பிடும் பயிர்க ளுக்குக்
குணமான மண்ணிங் குள்ளேன்;
வெம்பிட வேண்டாம்; வேளை
வீண்செய்யா துாழது வித்தத்
தும்பொடு நுகத்தேர் பூட்டித்
தொடங்குவீர் தொழி'லென் னாதே!

செந்தினை விதைத்து மண்ணில்
சிறுபயி ராகிச் சீராய்,
முந்தின களைகள் போக்க,
‘முடுக்காக வளர்ந்து, மூண்டு
பந்தனக் கதிர்கள் விட்டுப்
பாங்காக விளைந்தேன்; பார்த்து
வந்தெனைக் கொய்வீ' ரென்று
வைத்தாரை யழைத்தி டாதே!

எதையெதை யெவ்வெப் போதெங்
கெவ்வாறு செய்வ தென்றே
பதைபதைப் பின்றிப் பாங்காய்ப்
பயன்படப் பரிந்து செய்வீர்!
அதையதை யடைந்து காத்தே
அன்தினம் நுகர்வீ ராயின்,
இதைவிதி முறையா யென்றும்
ஏற்றினி யிதுபோல் வாழ்வீர்!