பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

வாழையும், தென்னை யும்போல்
வாழ்வுக்கு வழங்கி வாழ்ந்து,
பேழையில் முல்லை யாகிப்
பெருமணங் கமழ்வீ ராயின்,
ஏழை'யென் றியம்பு தற்கிங்
கெவனுமே யிருக்கா னேற்க
வூழையிவ் விதமா யோர்ந்திவ்
வுண்மையை யுணர்ந்து கொள்வீர்.

பாகையே , பழம்,பால் தேனே,-
பல்லாண்டிங் குண்டு வாழ்ந்தோர்
போகையில் பொருந்திப் போதல்,
புகழ்விகழ் வன்றி யில்லை!
ஆகையா ‘லில்லை' யென்னா
தக மகிழ்ந் தளித்தீ ராவீர்!
ஈகையில் மட்டு மீட்டற்
கியல்வதிப் புகழே' யென்பர்.

'பட்டினி யின்றி வாழ்ந்தான்
பாட்டாளி' யெனல்,பாங் கன்று!
‘எட்டுணைக் குறையு மின்றி
என்றென்றும் வாழ்வா னென்றால்,
விட்டது சனியன்; அன்றே
விடிந்தது நாட்டி லொன்றித்
தொட்டதும் துலங்கும்! வீட்டில்
துயரறும், தொல்லை தீர்ந்தே !

உழதவ னுணவில் லாதும்
உடை, யுறை விடமில் லாதும்
அழுதவ னாவா னாயின்,
அறிஞர்நெஞ் சனலாய் மாறும்!
எழுதவும் நேரும்; செல்வர்
இழிவுறு போரா" மென்றேன்,
தொழுதவ ரானார், 'தோன்றாத்
துணை நமக் கிதுதா' னென்றே!