பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126


வெருவரும் போர் மேல் சென்று:
வெல்லும்தன் கொழுநற் காகத்
'திருவரம் பற்றி ருக்கும்
தேளெ'னூ மரச னோடோர்
செருவர வேண்டும்; சென்று
சீமையே கான வென்று
தரவரும் புகழும், நாடும்
தழைத்திட வேண்டு மென்றே!

‘சிறுமையில் லாது சிந்தை
சிறப்புறுஞ் செயலைச் செய்தால்,
மறுமையின் வித்தா மென்னும்
மனத்திட்ப முற்றம் மாதும்,
திறமையைத் தேசத் தாரும்
தெரிந்துகொண் டொழுகத் தேர்ந்தாள் ,
'வெறுமையா யுண்டு றங்கும்
வீண்வாழ்வு வேண்டா மென்றே!

பண்டைநம் தமிழ்பண் பாடே
பாடலாய்ப் பகர்ந்தி ருந்தும்.
கண்டதைக் கற்றோ ராமல்
கல்தெய்வக் கதைகள் கற்க,
அண்டைநாட் டார்வத் தாள.
அயல்நாட்டா ராள, நாட்டைக்
கொண்டன ரென்ற வுண்மைக்
குறிப்போர்ந்து கொள்வி' ரென்றேன்

'குமரியர், குமரர் கூர்ந்து
கொள்கையாய்க் கொளவே வுள்ள
அமரலக் கியமிஃ தையா!
யாண்டைய தென்ருன், நண்பன் . '
சமரெ'னின், சரிவா வென்னும்,
'சந்தி'யென் றால்,"போ வென்னும்
நிமிரிய தமிழர் தங்கள்
திகரிலாச் சங்க நூல்கள் !