பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



139


வண்டியைப் பூட்டி வந்து
வாசலில் நிறுத்த நண்பன்,
கெண்டையங் கண்ணுள் கண்ணில்
கிளரொளி முத்தாய்க் கோக்க
மண்டியே, "எனைநீ ருங்கள்
மகளெனக் கொள்க!' வென்ருள்;
துண்டினால் நானென் கண்ணிர்
துடைத்தாங்கு புறப்பட் டேனே!


’ஆகியச் சூழ்ச்சி யாவும்
அன்றுதொட் டின்று காறும்
பாரியல் பாகப் பார்த்துப்
பரிதவித் தேன்நான்; பாவம்!
நேரியர் தம்மைக் கொன்று
’நீச'ரென் றிகழ்வார்!’ என்றே
சூரியன் சொல்லிக் கீழ்வான்
சுடரொளி செய்தா னன்றே!!