பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இந்தக் கதையைப் பக்திச் சுவை சொட்டச் சொட்டப் பருகாவிடின் பக்தர்கள் கண் உறக்கம் காணுமா? பாவம் பரிகாரமாகுமா?

ஆனால் தேவேந்திரனுக்கு 'ஆயிரங் கண்ணன்' என்று பெயர் உண்டானதற்குக் காரணம் இந்தக் கதை தான் என்று! கம்பன் சொன்னாலும் சரி, வாரியார் சொன்னாலும் சரி, வையகம் முழுவதும் கூடிச் சொன்னாலும் சரி, இது உண்மையாகாது. தேவேந்திரனுக்கு ஆயிரங்கண் ஆன அக்கதை முற்றிலும் வேறானது. எதார்த்தமானது என்றும் நம்பலாம்.

சாணக்கியனது அர்த்த சாஸ்திரம் (கன்னடம்) தேவேந்திரனைப் பற்றிச் சொல்லுவது இது தேவேந்திரனுக்கு ஆயிரம் ரிசிகளுடன் கூடிய ஒரு மந்திரி சபை இருந்தது. உலகத்தில் நடைபெறும் நல்லதும் பொல்லாததுமான எல்லாச் செய்திகளையும் அவன் அவர்களால் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுவான். ஆனதனால் அவனுக்கு இருந்தது! இரண்டே கண் தானெனினும், 'ஆயிரங்கண்ணன்' என்று மக்களால் பெயரிடப்பட்டுச் சிறப்புற்றன்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்திரன் கதை இவ்வாறதில் இருக்க இராமயாணத்தில் இந்திரனால் கெடுக்கப்பட்ட அகலிகை முனிவனால் கல்லாகி ராமன் கால் தூாசினால் பழய அகலிகையானது எவ்வாறு? இந்த மகத்தான பொய் எதற்காகத் தமிழ் இராமயாணத்தில் வந்து புகுந்தது? ராமனைத் தெய்வமென்று மக்கள் நம்பும்படி இட்டுக் கட்டிய படுகேவலப் பொய்ச் சூழ்ச்சியைத் தவிர வேறென்ன?

'இதிகாசம், எனும் சொல்லுக்கு சதுரரகராதியில் இரண்டு பெயர்கள் பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று மகா பாரதம்; மற்றொன்று இராமயாணம். இவ்விரு இதிகாசங்களையும் ஆராய்ச்சி என்னும் புடமிட்டுப் பார்க்கும் பொழுது உண்மை குன்றியளவும் பொய்மை குருடுமலையளவு மன்றே காணக் கிடக்கிறது.