பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33
தரணியில் தமிழ்வல் லோர்தாம்
தம்மிடம் வருகை தந்தால்
கருணையைக் கண்ணில் காட்டிக்
கடமையைக் கையில் காட்டி
வருணணொத் தளித்துக் காத்த
வள்ளல்கள் வரலா றெல்லாம்
பரணியி லிட்ட டைத்தார்,
பாரின்று பாரா வாறே!

பொற்பாலே புலமை யெய்திப்
புகழிட்ட முடிந்த தேனும்,
விற்போலும் புருவத் தென்மான்
வெறுமையை விரட்ட வேண்டி
அற்போலு மிதயச் செல்வ
ரகத்தினை யணுகற் கெண்ணின்,
கற்போலு முள்ளம் நீரில்
களிமண்ணாய்க் கரையு தின்றே!