பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52ஆராத, ஆர்வ மூட்டும்
அரும்பொரு ளனைத்துங் கொண்டு
கோராத விதமாய்க் கோரிக்
கொண்டாடும் கோவைக் குப்போய்ப்
பாராத கண்பாழ்; பார்த்துப்
பயன்படும் பொருளை வாங்கித்
தீராத கைபா' ழென்றும்
தெருக்கூடிப் பேசு தின்று!

'ஆவியை யரிதிற் காக்கும்
அருமருந்' தெனவே ஆய்ந்து ,
காவியம் களிக்கப் பாடிக்
காசினி நெறியைக் காட்டிப்
பாவியைத் திருத்தும் நல்ல
பாவல னன்றிப் பாரில்,
கோவையைக் குறைசொல் வோர்யார்?
குலவிடும் மனிதர்க் குள்ளே!

பாங்கேயோ, பண்போ, - பார்க்கும்
பார்வையிற் படிந்தி ராத
காங்கேயக் காளை யன்ன
கருப்பையன், கடையில் குந்தி
மாங்காயு மன்றே! மற்றம்
மட்டையு முரிக்கா நெற்றுத்
தேங்காயை விற்கத் தேர்ந்த
தெருவில்நாய்க் கேது சோலி?

மஞ்ஞைக்குப் போர்வை தந்த
மாண்டகு பேகன் மானப்
பஞ்சைக்குப் பசியைத் தீர்க்கப்
பரந்தவான் முகில்கள் பையப்
புன்செய்க்குப் பெய்து மிஞ்சும்
புதுமழைப் புனல்வந் துற்றால்,
நன் செய்க்கும் நல்கும் ஏரி
நலன்காணப் போய்நான் நின்றேன்