பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தனதெனக் கொண்ட தெல்லாம்
தமிழன றத் தான்வே றல்லாப்
புனிதனென் றுணரப் பெற்ற
புலவனும புகன்ற னனறே:
மனமது செம்மை யானால்
மந்திரம் வேண்டா' மென்று
கனிதனைப் பிழிந்த சாற்றில்
கற்கண்டு கரைத்தாங்" கென்றேன்.

"பகல்செய வந்தும், பையப்
பருதிவா னவனும் பாரை
யிகல்செயு மிரவுக் கீந்தாங்
கிரக்கமற் றேகு வான்;நீர்
புகல் செய வந்த புத்தேள்!
போகாம லிருந்து. போதம்
மிகல்செய வேண்டு" மென்றே
மிழற்றினாள், மேலோன் தேவி!

"மன்றள்ளி மகிழ்ந்து மாந்தும்
மாண்தகு தமிழ்க்கோட் பாட்டை
யின்றள்ளி யருந்தி னேன் நா"
னென்றுரைத் தெழுந்த நண்பன்,
கன்றுள்ளிக் கரைந்த அன்புக்
காராவின் காடிக் குள்புல்
சென்றள்ளி யிட்டு வந்து
செலவுபெற் றுறங்கச் சென்றான்.

துரவுகண் டுவந்த வாழைத்
தூறெனத் துணைவி யோடென்
வரவுகண் டுவந்த வள்ளல்
வாழ்வினை வாழ்த்தி, வாய்த்த
புரவுகண் டுவந்த நானும்
போதுற வுறங்கப் போனேன்,
இரவுகண் டுவந்து ழைத்தோ
ரின்பங்கண் டுறங்கு மாறே!