புராணப்போதை விபரீதமான கதைகள்தான் உன்னுடைய குட்டிக் கதைகள், என்ன விளக்கம், எதற்கு இதெல்லாம்? என்ற சிந்தனையில் ஈடுபடவேண்டாம், விளக்கிவிடு கிறேன் இதோ! வேலை, வெட்டி ஏதுமின்றி போவார் வருவாரை யெல்லாம் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு நாளெல்லாம் சூதாடிக்கொண்டே காலங் கழித்தவ னுக்கு ஊரார், 'யோக்கியன்' என்ற பட்டமும், வழிப் பறித் திருடனுக்கு, 'நாணயஸ்தன்' என்ற பட்டமும், ஊரறிந்த விபசாரிக்கு, 'கற்புக்கரசி' என்ற பட்டமும் கொடுத்தனர் என்று கூறினேன். உண்மையிலேயே கதையிலேகூடக் கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்ச்சிகள்தான் இவை! ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் கதைகளிலே கூடக் கற்பனைக் கண்கொண்டு காணக் கூசிடும் நிகழ்ச்சி கள் நாட்டிலே நடக்கத்தான் நடக்கின்றன. ஊரறியப் பொய் பேசுபவனும், எத்தனும், ஏய்ப் பவனும், புரட்டனும் ஊரிலே பெரிய மனிதனாக, கன வானாக, கண்ணியம் மிக்கவனாக மதிக்கப்படுவதை, நடத்தப்படுவதைக் கண்டதில்லையா, நாம்? கண்டிருக் கிறோம்! எத்தன், ஏய்ப்பவன், பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன் என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டியவர்கள் மாறாகப் பெரிய மனிதர்களாகவும் - கனவான்க ளாகவும் - கண்ணிய புருடர்க ளாகவும் 12
பக்கம்:புராணப்போதை.pdf/13
Appearance