போதை! மேதை! போதை! புராணப் போதை மனிதரை, மனித வாழ்வி லிருந்து எவ்வளவு தூரம் மாற்றி எங்கெங் கெல்லாமோ, இழுத்துச் செல்கிறது! மனிதன், மலந்தின்னும் வராகத்தையும், பிணந் தின் னும் பறவை யினங்களையும், இன்னும் எதையெதையோ, தன் வாழ்வும் தாழ்வும் கருதாது, பலன், பயன் எதையுமே எண்ணிடாது, கண் மூடித்தனமாக வணங்குகிறான்! கண் கண்ட தெய்வமே, கடாட்சித்தருள், கர்மத்தைப் போக்கு, கதியளி என்று ஏற்றியேற்றிப் போற்றுகிறான்! இந்த இழிநிலைக்குக் காரணமென்ன? மனிதன் தன்னை, தன்னிடமுள்ள பகுத்தறிவைவிட்டு, தன்னிலும் தாழ் வான, கீழான மிருகங்களையும், அதையும்விட மனிதரையே கடவுள் என்றும் மகான் வழிகாட்டி யென்றும் கொண்டி டும் போக்கு எதனால் ஏற்பட்டது? எந்த சூழ் நிலையால்? மனிதனது சிந்தனைச் சிக்கல் மனிதனை மயங்கிடும். நிலைக்குக் கொண்டு சென்றிடும் நேரத்தில், சில சுயநலமி கள் ஆனால் சூட்சுமந் தெரிந்தோர் சூதுவா துடன் இழைந்து குழைந்து பழகிப் பாகவதம், புராணம் என்பன போன்ற வற்றைச் சந்தர்ப்பந் தெரிந்து பாடினர், படித்துக் காட்டி னர், பரப்பினர்! புராணத்தில் கூறப்படும் நிகழ்ச்சிகள், சத்காரியங் மனிதனது சிந்தனைக்குத் கள், கடவுட் கைங்கர்யங்கள் 3
பக்கம்:புராணப்போதை.pdf/4
Appearance