தளை போட்டு, மயக்கி, சுய நினைவற்றவ னாக்கிப் போதை கொண்டிடச் செய்கின் றன! போதை யேற்றும் புராணங்களைப் பாடினோர், படித் தோர், பரப்பினோர், யாவரும் மேதைகள் தான் என்பது மறுக்க முடியாதுதான். மேதை! அறிவிலும், ஆராய்ச்சியிலும், சிந்தனையிலும், செயலாற்றும் முறையிலும் பண்பிலும் வளர்ந்துள்ளவ னாவான்! மேதை மனிதனது மேதை நல்ல முறையிலிருந்து மாறி, மேதாவித்தனம், குறுக்கு வழியில், அதாவது பிறரது அறியாமையை, அதைவிட சிக்கலான சூழ்நிலையைப் பயன் படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும்,தங்களது மேதையால், பிறரைத் தாழ்த்தி, தாழ்த்தி மட்டுமல்ல, அடிமைப்படுத்தி, உடல் உழைப்பு மட்டுமல்ல, அறிவை யுமே கட்டுப்பாடாகக் கலங்கச் செய்து குழப்பித் தன்னடிமை யாக்குகின்றனர்! மேதையின் புத்தி கூர்மையால், சுகவாழ்வு வாழ, குனி யாது வளையாது குந்திக் குதிர்போல் பெருக்கக்கண்டு பிடிக்கப்பட்ட சுயநலச் சுரண்டலே, புராணங்கள்-புராணப் போதை! போதையிலே மயங்கிச் சிந்தனையற்று மட்டுமல்ல, சிந் திக்கவே மறுத்துக் கிடக்கும் மக்களின் மன நிலையைத் தட்டி, தூண்டி, கிளறி, சுறு சுறுப்பூட்டிடும் நல்ல முயற் சியை, மேதைகள், குறுக்கு வழியிலே சென்ற சிங்கார வலையை, புராணப் போதையைத் தெளிய வைத்திட, இக் காலத்தில் பலப்பல மேதைகள்-மேதை, மக்களின் மேன் மைக்கே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் எழுச்சியையுமே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டது 4
பக்கம்:புராணப்போதை.pdf/5
Appearance