கருணாநிதி நாட்டின் ஒரு சில பல பகுதிகளில் நல்ல விளைச்ச லும், வேறு சில பகுதிகளில் விளைச்சலின்மையும் ஏற் பட்டு. விளைச்சலற்ற பகுதியினருக்குத் தேவையான உணவுப் பொருள்கள், நியாயமான விலைக்குக் கிடைக்க முடியாமற் போய்விட்டது மட்டு மல்ல, நாட்டின் மொத்த உற்பத்தியே கூட, நாட்டு மக்களின் தேவைக் கும் குறைந்த அளவினதாக இருந்தது. இந்த நேரத்திலே, நாட்டில், மக்களின் வாழ்க்கைக் குத் தேவையான, முதற் தேவைகளில், முக்கிய தேவை யான உணவுப் பஞ்சம் தலை விரித்தாடத் தொடங்கியது! தலை விரித்தாடத் தொடங்கிய பஞ்சத்தை, பசி யின் கோரத்தைப் பொருட்படுத்தி, மொத்த மக்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி, உள்ள, கிடைத்த, கிடைக் கக் கூடிய பொருள்களைப் பங்கிட்டுத் தந்தனர், ஆட்சி யாளர்! பங்கிட்டுத் தரும் பெரும் பொறுப்பையும் ஆட்சியாளரே ஏற்றுக் கொண்டனர்! உணவு உற்பத்தி செய்திடும் நிலங்களிலே, வேறு பொருள்களை உற்பத்தி செய்யாது தடுத்தனர்! நிலச் சொந்தக்காரர்க ளிடமிருந்து, விளைந்த உண வுப் பொருள்களை, அவர்களது. தேவைக்கும் (பங்கீட்டு அளவுப்படி தான்) விதைக்கும் விட்டு விட்டு, அதிகப் படியானவற்றை, சர்க்காரே விலை கொடுத்து வாங்கி, சேமித்துப் பாதுகாத்து, பங்கீடு செய்தனர், மக்களுக்கு! வெளி நாடுகளி லிருந்தும் தேவையானபோது, முடிந்த அளவிலே உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்து பங்கீடு செய்து வந்தனர், சர்க்கார்! 53
பக்கம்:புராணப்போதை.pdf/54
Appearance