புராணப்போதை அன்றாடக் கூலி வேலை செய்து கையிலே ஏதோ கொஞ்சம் பணத்துடன் வீடு திரும்பிய ஏழைத் தொழி லாளி. நேரே கடைக்குச் சென்று, தனது குடும்பத்திற் குத் தகுந்தபடி, கிடைக்கக் கூடிய, பங்கீடு அரிசியைச் சுலபத்தில், நிச்சயமாகப் பெறும் நிலையிலே, ஓரளவுக் கேனும் நிம்மதியாக, வாழ முடிந்தது. 'பங்கீடு' முறைக்கு முன், பஞ்ச நேரத்திலே, கை யிலே காசு கிடைக்கும் நேரத்திலே, கடையிலே அரிசி கிடைக்காது, கிடைத்தாலும் நியாய விலைக்குக் கிடைக் காது! நியாய விலைக்கு மேற்பட்டு விலை கொடுத்தாலும், ஏழைகள் வாங்கும் சிறு, சிறு அளவு தினம் தினம் ஏன், வேளைக்கு வேளை தேடித் திரிந்து, அலைந்து, அலுத் துப் பெரும் ஓயாத, ஒழியாத தொல்லை யென்ற தூற்று தல்களுக் கிடையே தான் கிடைக்கும்! சில நேரங்களில் அதுவும் இல்லையென்றாலும் இல்லைதான்! இத்தகைய அவதி நிறைந்த ஆபத்தானநேரத்திலே, வசதியுள்ளோர் மட்டும் சேமித்து வைத்துத் திருப்தி யுடன் வாழ, மற்றவர் மீளாத துன்பச் சுழலில் சிக்கித் துடித்திடும்,கோர நிலைமையை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது உணவுக் கட்டுப்பாடு! பங் கீடு முறை ! என்னிடம் எழுபது ஏக்கர் இருக்கிறது. என்னிஷ் டம்போல் உண்பேன்! ஏழு எட்டு வருடங்கள் மழை பெய்யா விட்டாலும் எனக்குக் கவலையே இல்லை. சேர்த்து வைத்துக் கொண்டேன், என்று அண்டை அயலார், கையிலே காசிருந்தும், ஏழைகளாய் இருப்ப 54
பக்கம்:புராணப்போதை.pdf/55
Appearance