உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி நினைக்கமுடியாத நிலையில்தானே நம்மை மென்று நிறுத்துகின்றது? ஏன் இந்த நிலை! இழிநிலை! இல்லாத நிலை, எல்லாம் இருந்தும்! என்ற கேள்விக் குறிகள், மக்களின் மன வேதனைக் குரல்கள், விம்முதல்கள் ஆளவந்தாரை நோக்கி கிளம்பிய வண்ணம் நாடு குமுறிக்கொண் டிருக்கிறது. கிடைக்கின்ற குறைந்த அளவு உணவாவது உருப் படியானதாக, உபயோகிக்கத் தகுதியுள்ளதாக இருக் கிறதா? இல்லையே! மந்திரிகளே! மக்களின் பிரதிநிதிகள் என்று மார் நிமிர்ந்து உலவிடும் மாணிக்கவேலர்களே! மகான் என்றும்,மாமுனிவர் என்றும் போற்றப்படும் ஆச்சாரி யார் அவர்களே! மனதில் எண்ணிப் பார்த்து, ஒரு முறையல்ல, ஓராயிரம் முறை எண்ணி யெண்ணிப் பார்த்து நெஞ்சார இதனை மறுத்திடத் துணிவுஉண்டா? வருமா? வருவீர்களா? ஏன் மாட்டீர்கள்? மிட்டாவும், மிராசும் வீசிய வசீகர வலையிலே சிக்கி, பண்ணை முதலாளிமாரின் பக்குவ மொழிகளிலே பாசமும் பற்றுதலும் கொண்டு, தேர்தல் காலங்களிலே பணக்காரர்கள் செய்த பயனுள்ள பக்கத்துணையை நினைத்து, கிடைத்த பதவியை எப்படியேனும் காப் பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில். எதையும், ஏழை மக்களின் மக்களின் அழுகுரல் எதையுமே சரிவர, தீர, ஆரஅமர ஆலோசிப்பதாகத் தெரியவில் 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/58&oldid=1706107" இலிருந்து மீள்விக்கப்பட்டது