புராணப்போதை லையே, என்று நாட்டினரின் ஓட்டால் நாட்டையாண்டி டும் நாடாள்வோரைக் கேட்டிடக்கூடாதா? கூறுங்கள் மனந் துணிந்து! குற்றமா? ஏன் குற்றம், எது, எப்படிக் குற்றம்? பசி பசி என்று புசித்திட ஏதுமின்றி, கிடைத்திடும் உணவும் உதவாக்கரையாகவே கண்டிடும் மக்கள் குரல் உங்கள் செவிகளிலே கேட்டிட வேண்டும் என்ற விருப்பத்தால் நல்ல விளைவுகள், அதனால் ஏற்படுத்தும் எண்ணத்தால் கிளம்பிடும் கேள்விகள். கேள்விக் குறி கள் இவை யென்பதை நன்றாக எண்ணிட வேண்டு கிறேன். நாட்டின் இன்றைய நிலை என்ன? நாட்டு மக்கள் நல் வாழ்வு வாழ்கின்றனரா? ஏன் இல்லை? எதனால்? நாட்டின் நாலா பக்கங்களிலும் வேலையற்ற கைத் தறியாளரின் கண்ணீர்ப் பெருவெள்ளம் கட்டுக்கடங் காது கரை புரண்டோடுகிறது! மது விலக்கினால் வேலையற்று வாடுவோர் ஒரு பக்கம்; மழையின்றித் தவித்து மானத்தைப் பார்த்து மானத்திற்கஞ்சி உயிர் வாதைப்படும் பண்ணையாட் களின் பரிதாபக் கூட்டம் மற்றோர் பக்கம், வேலை செய்தும் வேண்டிய வசதி, உழைப்புக் கேற்ற ஊதியமின்றி வாடிடும் ஆலைத் தொழிலாளர். இன்னும் மற்ற தொழிலாளர்கள்! இடையே இப்படியு மின்றி அப்படியுமின்றி, ஏழையுமில்லாது பணக்காரனு மில்லாது ஏதோ மாதா மாதம் சிறுசிறு அளவில், 58
பக்கம்:புராணப்போதை.pdf/59
Appearance