உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி கதைகளுமல்லவா வருகின்றன, மக்களின் எண்ணத்தி லிருந்தும், பேச்சிலிருந்தும்! சக்கரவர்த்தியாக வாழ்ந்த அரிச்சந்திரன் பட்ட பாடு, ஆண்டவனின் சோதனையால் என்றுதானே புராணம் கூறுகிறது? ஆண்டவனின் சோதனைதானா தலைவிதி? ஆம்! என்று பலர் பதில் கூறுவர். மிகவும் தெரிந் தவர் போல! ஆம்! இந்த நாட்டிலே கண்முன் காணும் காட்சி யையும், எளிதில். அல்லது கொஞ்சம் எண்ணிப் பார்த் தால் புரிந்திடும் அல்லது புரிந்துகொள்ளக்கூடிய கருத் துக்களையும் பற்றி மக்கள் எண்ணுவதில்லை, ஏன் என்று கேட்பதுமில்லை அக்கரையோடு! ஆனால் காணாத காட்சிகளையும், கற்பனைச் சொர்க்க வாழ்வு - பயங்கர நரகவாதை - புரியாத அதல சுதல பாதாளலோகங்கள், யானைமுகன்,ஆறுமுகன், காளி, மாரி யம்மா முதலிய பலபல உலகங்களைப் பற்றியும்,ஆண் டவரின் ஆதி- அந்தம், ஆடல் - பாடல், ஊடல்-கூடல் திருவிளையாடல் பற்றியுமே பெரிதும் அக்கரையோடு மட்டுமல்ல, அவசியம் என்ற எண்ணத்தோடு பேசப் படுகிறது, படிக்கப்படுகிறது. பாடப்படுறது, ஆடல், பாடல், சினிமா முதலிய யாவற்றிலும் ஊட்டப்படு கிறது! பாமர மக்களில் பலர், பாமர மக்கள் மட்டுமல்ல, மக்களில் மிகமிகப் பெரும்பாலோர். இத்தகைய 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/76&oldid=1706125" இலிருந்து மீள்விக்கப்பட்டது