உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை எண்ண உலகத்திலே, யாரோ, என்றோ கூறிச் சென்ற மாய உலகத்தைப் பற்றிய, உன்னதமான கடவுள் களைப் பற்றிய, கண்ட கண்ட கதைகளைப் பற்றிய கனவுமல்ல, நினைத்து நினைத்து உருகி, உருக்குலைந்து போகின்றனர் வாழ்வில், உலக வாழ்வில்! எண்ணி கடவுளையும், கடவுள் கதைகளையும் உருகியுருகிக் காலத்தை, கருத்தைச் சரிவர பயன்படுத் தாது, பிறரின் போதனைகளையே கேட்டுக் கேட்டு பழைய முறை, பழைய பாட்டு, பழைய ஆசாரம், புராதனம், புராணம், புராணத்தில் சொன்னது என்று புராணத்தின்பால் பற்று, பாசம் பரிவு ஏன் போதையுங் கொண்டு புதுமைக்கும், புத்தறிவிற்கும். புது வாழ்விற் கும், பொது வாழ்விற்குமே பயன்படாத, பயன்படவும் விரும்பாத, பகுத்தறிவிருந்தும், பகுத்தறிவிழந்து, கண்மூடி வாழ்வு. ஆனால் போதையிலே - பழையப் போதையிலே -புராணகால ஆச்சார அனுஷ்டான மென்று கூறிடும், புகட்டிடும், பரிவு காட்டிடும் புரா ணப் போதையிலே புரண்டு புரண்டு, உருண்டுஉருண்டு உடல் மட்டுமல்ல, உள்ளம், உணர்வு யாவுமே கரை பட்ட, காயம்பட்ட கவலைக்கிடமான நிலையிலே நிலை தவறி கிடக்கின்றனர்! மனித வாழ்வு பற்றியே கவலைப்படாத, கவலைப் பட மனமுமற்ற மக்களிடையே மோட்டார் மட்டு மல்ல, ஆகாயவிமானமே சென்றால்கூட ஏதோ ஆரம் பத்தில் வாய்பிளந்து நிற்பர். பின்னர், 'இது என்ன பிரமாதம்,குபேரனது புஷ்பக விமானமும், இராம 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/77&oldid=1706126" இலிருந்து மீள்விக்கப்பட்டது