பக்கம்:புராண மதங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை நமக்கு, குழந்தைப் பருவம் கடந்து குமரனான பிறகு' 'ஐஞ்சு கண்ணனை' நம்பு என்று கூறும் மூதாட்டியிட மும், இவ்வளவு வயதுதான அம்மையார், உண்மை அனு பவ மின்றி இதனை உரைத்திடுவரோ என்று எண்ணுங் கால், ஐஞ்சு கண்ணன் என்று ஒருவகையினர், இருக்க வுங் கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது என்று பேசுபவர்களிடமும், ஐஞ்சு கண்ணன் என்று நமது ஒளவையார்கள் கூறுங்காலை, ஐயகோ! ஈதென்ன சிறு மதி எனறு சீறும் சீர்திருத்தவாதிகாள் கேண்மின்! ஐஞ்சுகண் என்றால், ஐந்து கண்கள் என்பதல்ல பொருள் , அஞ்சு கண் என்றால் என்ன? கண்டவரை அஞ்சச் செய்யும் கண்! இதனையே தான் தாய் மொழிகி றாள் நந்தாய் மொழியினைப் பழிக்கலாமே? என்று பேசும் சொல்லில் செப்படி வித்தை செய்து காட்டு பவர்களிடமுமே, அறிவு உலகம் கோபிக்கிறது- அவர் களின் போக்கையேதான் கண்டிக்கிறது. புராணத்தில் மதபோதனை, ருசிகரமான கதைகள் மூலம் அமைக் கப்பட்டுள்ளன. அவைகளிலே, வேறு துறகைளுக்குத் தேவையான கருத்துக்களைத் தேடுவது வீண்வேலை -- அல்லது பிறரை ஏய்க்கும் வேலை. 'தென் இந்திய ரயில்வே கயிடைப் புரட்டிப் பார்க்கும் ஒருவன், டில்லிக்கும் அரித்துவாரத்துக்கும் இரயில் புறப்படும் நேரத்தைக் கூற எங்கனம் இயலும்! ஒரே பாதையின் 'கயிடாக' இருந்தாலுங்கூடப், பழைய கயிடைப் புரட் டிப் பயனிராதே. ஏன், இந்தச் சாதாரண விஷயத்தைப் புரிந்துகொள்ள, பசுபதி பாசம் என்பன போன்ற பிர மாதமான கொள்கைகளைப் பற்றிய சிக்குகளை அறுக் கும் பெருமதியினர், சிரமப்படுகின்றனர். புராணத்தை , மதபோதனை ஏடு என்று ஒப்புக்கொண்டு, அதற்காகத் தான் அவை பயன்படும் என்பதைத் தைரியமாக ஒப் புக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் முதற்கொண்டு மார்வலி வரையிலே உள்ள 124 வியாதிகளைக் கண்டிக் கும் சூரணம், நோய் இல்லாவிட்டாலும் சாப்பிடலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/10&oldid=1033249" இலிருந்து மீள்விக்கப்பட்டது