உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

புராண-மதங்கள்

தேக ஆரோக்கியத்துக்கு; அதுமட்டுமில்லை, பித்தளைப் பாத்திரங்களை. இந்தச் சூரணத்தை கொண்டு துலக்கினால், அசல் தங்கம்போல் பிரகாசிக்கும், என்றுவகையுள்ள எந்த வைத்தியராவது, தமது மருந்துபற்றிக் கூறுவாரா? அனுபவமும் திறமையும் உள்ளவைத்தியர் ஒரே மருந்தையே கூட, இன்ன விதமான தேகமுள்ளவர் தேனிலும், இன்ன விதமுள்ளவர் பாலிலும் கலந்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்களே! பிறவிப் பிணியைப் போக்கும் மருத்துவ முறையாம் மார்க்கம்! அதற்காக ரசாயனம், சர்பத்து, லேகியம், கஷாயம், மாத்திரை போன்ற பல மருந்துவகைகள் உண்டு, அவைகளிலே, புராணம், போதை தரும் லேகியம், தத்துவம் கஷாயம், காவியச் சுவையுடன் கூடிய கதைகள் சர்பத்து போன்றவை எம்மிடம் உள்ள இம்மருந்து எப்பிணியும் போக்கும், பிணிபோக்கி மட்டும்மல்ல, பீடை நீக்கி, அது மட்டுமல்ல, பித்தளையைப் பொன்னு மாக்கும் என்று பெருமை பேசுவது, அழகா, நியாயமா, யூகமுள்ள செயலாகத்தான் அது மதிக்கப் படுமா?

***

கற்பனை லோகங்களைச் சித்தரித்த கவிவாணர்கள், கண்டனத்துக்கு உள்ளானதற்குக் காரணம் என்ன? அந்தக் கவிவாணர்களின் சித்திரங்களை, வெறும் கற்பனைகள் என்று ஏற்றுக்கொண்டு பேசாமல், அந்தக் கவிவாணர்களைத் தாங்கிக்கொண்டிருப்பதாகக் கருதும் கலாவாணர்கள், புலவர்கள் குழு, அவை கற்பனையல்ல, அவைகளிலே வரலாறு மிளிருகிறது. சீர்திருத்தக் கருத்துக்கள் பூத்துக் கிடக்கின்றன, என்று பேசுகிற போக்குதான். சில்லறை அதிகாரியின் சீற்றமும் சிறு செயலும், எங்கனம் ஆட்சியையே மக்கள் அலட்சியப் படுத்தவும் கண்டிக்கவும் தூண்டுகின்றதோ, அது போலவே, இந்தப் 'புலவர்' என்போரின் போக்கே, கவிவாணர்களைக் கண்டனத்துக் குரியவர்க ளாக்கிவிட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/11&oldid=1684449" இலிருந்து மீள்விக்கப்பட்டது