பக்கம்:புராண மதங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-- அண்ணாதுரை 15. உமாதேவி காற் சிலம்பில் ஒன்பது முத்து கள். உதிர, அவைகள் உமாவாக மாற உமா கண்டு கோபமடைந்து அவர்களைச் சபிக்க, சாபத்திற் கஞ்சிய அவர்களின் உடம்பில் வியர்வை உண்டாக, வியர்வை யினின்றும் லக்ஷம் வீரர்கள் தோன்றினார்கள். 16. ஷை நவ உருவங்களின் தொப்பிள் வழியாக வீரவாகு முதலிய நவ வீரர்கள் வாலிபப் பருவத்தின ராய்த் தோன்றினார்கள். 17. பானுகோபன், கூரையின் வழியாக சூரியகிர ணம் பட்டமையால் சூரியனைப் பிடித்து வந்தான். பிறகு கட்டில் காலில் கட்டிவைத்தான். 18. சிவனால் அளிக்கப்பட்ட அக்கினிப் பொறி கள் யாவரும் சிறிதும் அணுகா வண்ணம் வெப்பத் துடன் உலகெங்கும் வீசின. வாயுக்கள் உலர்ந்தன, கடல்கள் வறண்டன. 19. வாயு அக்கினிப் பொறிகளை தாங்க முடியா மல் கங்கையில் போட, கங்கை சரவணப் பொய்கையில் போட்டுவிட்டாள். 20. பார்வதிதேவி ஸ்நான அறைக்கு போகும் பொழுது அழுக்கைத்திரட்டி உருசெய்து, அவ்வுரு வுக்கு உயிர் கொடுத்து வாயிலில் காவல்வைக்க, சிவன் அங்குவர, உட்செல்ல அனுமதிக்காததால் கோப மடைந்து அவ்வுருவை வாளால் வெட்டிவிட்டார். பிறகு விஷயமறிந்த பார்வதி புத்திர சோகத்தால் புலம்ப , சிவன் தேற்றி வெளியில் வந்து பார்க்க , அவ் வுருவின் தலையைக் காணவில்லை. மூன்று உலகில் தேடி யும் அகப்படவில்லை. உடனே அங்கொரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர் கொடுக்க யானைமுக விநாயகராயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/22&oldid=1033261" இலிருந்து மீள்விக்கப்பட்டது