பக்கம்:புராண மதங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை "ஏராளமான பணத்தை உனக்கு ஆபரண அலங் காராதிகளுக்குச் செலவிடுகின்றனர் "அந்தச் செலவு எனக்காகவா செய்யப்படுகிறது? நான் மண்ணோடு மண்ணாகப் படைத்த பொன்னைக் கண்டா பூரிப்படைவேன். தேவி! பாம்பை அணிபவன் என்று கூறும் அதே பாமரர் பவுன்களைச் செலவிடுவது எனக்காகவென்றா , எண்ணுகிறாய் பக்திமான் என்று தன்னைக் காட்டிக்கொள்வதன் மூலம் பாமரரை அடிமை கொள்ளலாம் என்று நினைக்கும் காசு படைத்தவனின் கபட நாடகமல்லவா அது "பாமாலை சூட்டினரே "தங்கள் புலமையைக் காட்ட" "பூமாலை சூட்டுகின்றனரே' "பூவையருக்குப் பிரியத்துடன் பூஜாரி வழங்க, எனக்கில்ல "எதற்கும் நீரே துணை என்று கூறிப் போற்று கின்றனரே "தன்னம்பிக்கையைத் தற்குறிகள் இழந்துவிட் டால் தலையாட்டிப் பொம்மைகளாகிவிடுவர். பிறகு நமது தர்பார் நடத்தச் சௌகரியமாக இருக்குமென்று தன் னலக்காரர்கள் புகுத்திய தத்துவமல்லவா அது. அது எப்படி என்னைப் போற்றுவதாகும் "உன் அடிதொழுதார்க்கு உண்டு சுகம் என்று கூறிப் பூஜக்கின்றனரே" "சுயநலக்காரன், ஓய்வு நேரத்தில் சொல்வது அது. கள்ளமறியாச் சிந்தைகாரன் பிறனுடைய சுயநலத்தால் ஏமாறும் போது பேசும் வாசகம். அது என்னைத் திருப்தி செய்யுமா?" --- - - --- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/44&oldid=1033283" இலிருந்து மீள்விக்கப்பட்டது