உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

51

வுடனே, எவ்வளவு இன்றியமையாத செய்திகள் இருந்த போதிலும் அவற்றை நிறுத்தி விட்டு இவற்றிற்கே முதலிடம் கொடுத்து வெளியிடவேண்டுமென்ற நினைப்பு அவர்களுக்கு எப்படியோ உண்டாகி விடுகிறது. 400, 500 வயதுள்ள ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தால், அது பற்றிய முழுஉண்மைகளையும் அறிந்த பின்பே பத்திரிகைகளில் வெளியிட வேண்டுமென்ற நல்லெண்ணம் பெரும்பான்மைப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு உண்டாவதில்லை. இவ்வாறு வெளியிடப்படும் 'அற்புதச்' செய்திகள் வெளியிட்ட சில காலத்துக்குள் மறைந்து விடுகின்றன. கடவுளோடு பேசிய பெண் இப்ப என்ன செய்துகொண்டிருக்கிறாள்? 465 வயதுள்ள மனிதன் இப்போது எங்கு இருக்கிறான்? இவர்களைப் பற்றி அளவு கடந்து புகழ்ந்து மக்கள் மனதைக் கவரும் முறையில் பத்திரிகைகளில் எழுதினோமே! இவர்களைப் பற்றி இப்போது ஒன்றும் தெரியவில்லையே! ஏன்? என்று கூடப் பத்திரிகை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பாமரமக்களுக்கு ஏதாவது புதியதாகக் கவர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தால் அதுவே போதும் என்ற அளவில்தான் பத்திரிகை ஆசிரியர்கள் பலர் நடந்து கொள்கின்றனரேயன்றி, தங்களுக்குக் கிடைக்கும் செய்திகளைப் பரிசீலனை செய்து எழுதுபவர்களுக்கு மட்டு மல்ல—படிப்பவர்களுக்கும் அறிவு இருக்கிறது என்று எண்ணி, உண்மைக்கும் அனுபவத்துக்கும் பொருந்த செய்திகளை வெளியிட வேண்டு மென்று கருதுவதில்ல. இந்த இரங்கத் தக்க நிலை மாறும் வரையில் பல அற்புதங்கள் இந் நாட்டில் உண்டாக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/52&oldid=1700290" இலிருந்து மீள்விக்கப்பட்டது